தற்போது VRS வாங்கலாம் என்ற மனநிலையில் உள்ளோர் சற்று யோசித்து முடிவெடுங்கள்
👉 8 வது ஊதியக் குழுவில் முக்கிய இரண்டு அம்சங்கள் நடைமுறைப் படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
🔥🔥🔥 முதல் அதிர்ச்சி தகவல் 🔥🔥🔥
👉 01.01.2026 முதல் ஊதியக் குழுவின் பரிந்துரைகள்
வேலைவாய்ப்பு செய்திகள் 2025
என்ற கட்டாயமில்லை.👉 இதனால் ஒன்றிய அரசு எப்போது நடைமுறை படுத்தலாம் எனக் கருதுகிறதோ, அப்போது தான் நடைமுறைப் படுத்தப் படும்.
👉 ஊதியக் குழுவின் பரிந்துரைகளை காலதாமதமாக நடைமுறை படுத்தினால், நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது.
👉 எந்த தேதி முதல் நடைமுறை படுத்தப் படுகிறதோ, அந்த தேதி முதல் பணப்பலன்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
🔥🔥🔥 இரண்டாவது அதிர்ச்சி தகவல் - ஓய்வு பெற்றோருக்கு ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி, அடிப்படை ஓய்வூதியம் ஊதிய நிர்ணயக் காரணி (Fitment factor) மூலம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது. 🔥🔥🔥
👉 அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு ஊதியம் வழங்குவதை விட, ஓய்வூதியத்திற்கு அதிக செலவிடப்படுவதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது
👉 காரணம் : புதிய நியமனங்கள் குறைவு, ஒப்பந்தம் மூலம் பணி நியமனம், தொகுப்பூதியம் மூலம் பணி நியமனம்,
TEACHERS NEWS |
👉 இதனால் 8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி, புதிய ஊதிய நிர்ணயம் (Expected Fitment factor 1.85 to 2.27) பணியில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப் படும்.
👉 ஓய்வூதியம் பெறுவோருக்கு, அடிப்படை ஓய்வூதியம் மேற்கண்ட ஊதிய நிர்ணய காரணி (Fitment factor) மூலம் அதிகரித்து வழங்கப்பட மாட்டாது.
👉 பணி நிறைவு பெறும் போது நிர்ணயம் செய்யப்பட்ட அடிப்படை ஓய்வூதியத்திற்கு மட்டும், ஆண்டிற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப் படும்.
👉 இதனால் ஓய்வூதியம் பெறுவோருக்கு, கணிசமான அளவில் பண இழப்பு ஏற்படக்கூடும்.
👉 ஆகவே, அவசரப்பட்டு VRS தந்து விடாமல், 8 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறை படுத்தப்பட்ட பின், VRS பெற்றுக் கொள்ளலாம்.
🔥🔥🔥 தமிழகத்தில் எப்போது 8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட வாய்ப்பு உள்ளது? 🔥🔥🔥
👉 ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஒன்றிய அரசுக்கு அளிப்பதற்கே, 2026 ஜூன் மாதத்திற்கு மேல் ஆகி விடும்.
👉 அதை அரசு பரிசீலனை செய்து நடைமுறை படுத்த சில மாதங்கள் ஆகலாம்.
👉 அதற்குள் தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து, வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைத்திருக்கும்.
👉 2029 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலின் போது தான், ஊதியக் குழுவின்
வேலைவாய்ப்பு செய்திகள் 2025
பரிந்துரைகள் பற்றி அப்போதைய தமிழக அரசு பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது.👉 அதன் பின், இதற்கான குழு அமைத்து, தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறை படுத்த 2030 ஆம் ஆண்டு ஆகலாம் எனக் கருதப்படுகிறது.
🔥🔥🔥 ஆகவே VRS மனநிலையில் உள்ளோர் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது 🔥🔥🔥
No comments:
Post a Comment