தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; கடந்த ஆண்டில் மாணவர்களின் டாப் சாய்ஸாக இருந்த 25 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே
பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் மாணவர்களின் விருப்பமாக உள்ள டாப் 25 கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு சமீபகாலமாக ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக பொறியியல் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள டாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
டாப் கல்லூரிகள் கடந்த ஆண்டு மாணவர்கள் தேர்வு செய்ததன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்தக் கல்லூரிகளில் படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.
1). அண்ணா பல்கலைக்கழக சி.இ.ஜி கேம்பஸ், சென்னை
2). அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை
3). மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி
4). எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
5). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
6). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
7). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை
8). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை
9). தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
10). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
11). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
12). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
13). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
14). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
15). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
16). அண்ணா பல்கலைக்கழக ஏ.சி.டெக் கேம்பஸ், சென்னை
17). அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி
18). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
19). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
20). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
21). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
22). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்
23). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்
24). அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
25). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்.
No comments:
Post a Comment