School morning prayer activities 8.4.2025 - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/04/2025

School morning prayer activities 8.4.2025

 திருக்குறள் 

பால் : பொருட்பால்.

 இயல்: குடியியல்

 குறள் எண்:1007.  

             

அதிகாரம்: நன்றிஇச் செல்வம்


 அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்

 பெற்றாள் தமியள்மூத் தற்று.


பொருள்:

ஏழைக்கு கொடுத்து உதவாதவன் செல்வம், அழகுள்ள குமரி

மணமாகாது கிழவியானது போலும்."


பழமொழி :

நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.


A tree is known by its fruit.


இரண்டொழுக்க பண்புகள் :


* தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன். 


* தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமல்  எழுதுவேன்.


பொன்மொழி :


"""முடியாது"" என்று  நீங்கள்  சொல்வதையெல்லாம்   யாரோ  ஒருவர்  எங்கோ   செய்து   கொண்டுத்தான்  இருக்கிறார்.----அப்துல் கலாம்."


பொது அறிவு : 


1. தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்? 


 விடை :  பேரறிஞர் அண்ணா.   

2. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை யார்? 


விடை :    இராஜாராம் மோகன்ராய்


English words & meanings :


Boat.    -     படகு 


Bus.    -      பேருந்து 


ஏப்ரல் 08


பங்கிம் சந்திர சட்டர்ஜி  அவர்களின் நினைவுநாள்



பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838– ஏப்ரல் 8, 1894) ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.


நீதிக்கதை


தந்திர சேவல்


காட்டில் உள்ள மரத்தின் மேல் சேவல் ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் உடல் கொழு கொழு என்று இருந்தது.நல்ல பலசாலியாகவும் இருந்தது. 


அது இருந்த மரத்தின் வழியாக தினந்தோறும் நரி ஒன்று செல்லும். போகும் போது வரும்போது ""எப்படியாவது இந்தக் கொழுத்த சேவலைப் பிடித்து, ஒருநாள் உணவாக்கிக் கொள்ள வேண்டும்,'' என்று எண்ணியவாறு ஆசையுடன் சேவலைப் பார்க்கும். சேவலுக்கு நரியின் பார்வை புரிந்தது. 

அதனால் தனக்கு என்றேனும் ஆபத்து நேரிடலாம் என்று கருதி அது எச்சரிக்கையுடன் இருந்தது. 


இந்தச் சேவலைத் தந்திரத்தால்தான் வளைத்துப் போட்டு,தனக்கு விருந்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது. ஆகவே, ஒருநாள் நரி அவ்வழியே வரும்போது அது மரத்தின் கீழ் அமர்ந்து சேவலிடம் பேச ஆரம்பித்தது.   


"அழகிய சேவலே! உனக்கு விஷயமே தெரியாதா? இன்று நம்முடைய சிங்கராஜா ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். இன்று முதல் ஒரு வருடத்துக்கு யாரும், யாருக்கும் பகை கிடையாது. இது சமாதான ஆண்டு. எந்த விலங்குக்கும், மற்ற விலங்கால் பிரச்னை வரக் கூடாது.  


"எனவே, எதிரிகளாக இருந்த விலங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. அவை காட்டோர அருவிப் பகுதியில் நிலா வெளிச்சத்தில் பாட்டுப் பாடி ஆடிக் கொண்டிருக்கின்றன. எல்லா விலங்குகளும் ஆளுக்கு ஒன்றை ஜோடியாகச் சேர்த்துக் கொண்டன. எனக்குத்தான் யாரும் இல்லை என்று நினைத்தபோது, நீ என் ஞாபகத்துக்கு வந்தாய். வா, நாமிருவரும் சேர்ந்து அருவிக் கரைக்குப் போய் மற்ற விலங்குகளுடன் சேர்ந்து ஜாலியாக இருக்கலாம்,'' என்றது. 


நரி பேசப் பேச சேவல் அதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காமல் வேறு ஒரு உயர்ந்த கிளைக்குச் சென்று தலையை இங்குமங்குமாக ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. 


அதைப் பார்த்த நரிக்கு எரிச்சலாகஇருந்தது."நான் எவ்வளவு இனிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் மரக்கிளைக்கு மேலே சென்று எதையோ வேடிக்கைப் பார்க்கிறாயே,'என்றது.  


"நரியாரே, நீங்கள் சொன்னதைக் கேட்டேன். ஆனால், அதைவிட முக்கியமான சமாசாரத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றது. 


"அதை விட முக்கியமான சமாசாரமா? அது என்ன.....?''

 வேலைவாய்ப்பு செய்திகள் 2025

என்றது நரி."வெகு தூரத்தில் இரண்டு உருவங்கள் ஓடி வந்து கொண்டிருக்கின்றன!'' என்றது

அதை விட முக்கியமான சமாசாரமா? அது என்ன.....?'' என்றது நரி."வெகு தூரத்தில் இரண்டு உருவங்கள் ஓடி வந்து கொண்டிருக்கின்றன!'' என்றது 


சேவல்."அவை எப்படி இருக்கின்றன?'' என்று பயத்துடன் கேட்டது நரி. 


"இரண்டும் நாக்கை தொங்க விட்டிருக்கின்றன. அதன் கண்கள் பளபளவென ஜொலிக்கின்றன. அங்கும், இங்கும் பார்த்து எதையோ மூக்கால் முகர்கின்றன. அதற்கு நான்கு கால்கள் இருக்கின்றன. உங்களை விட உயரமாக இருக்கின்றன. ஆ... இப்போது கூர்மையான கோரைப் பற்களும் தெரிகின்றன. ஒருவேளை அவை ஓநாய்களோ,'' என்றது சேவல். 


"ஐயோ, அவை ஓநாய்களில்லை. வேட்டை நாய்கள். பார்த்தால் கடித்துக் குதறி விடும்,'' என்று கூறியவாறு ஓட்டமெடுத்தது நரி. நரி ஓடுவதை பார்த்து சேவல் சிரித்தது.


நீதி:  ஏமாற்றாதே! ஏமாறாதே! 


இன்றைய செய்திகள் - 08.04.2025


* தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 9 இல் வெளியாகும். 10, 11 பொதுத் தேர்வு முடிவுகள் மே 19 இல் வெளியிடப் படும்.


* தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை உருவாகியுள்ளது என்றும், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு.


* உலக நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்த ட்ரம்பை கண்டித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேரணி.

* உலக குத்துச்சண்டை கோப்பை: இந்த தொடரில் தங்கம் வென்ற முதல்  இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஹிதேஷ் படைத்துள்ளார்.


* சார்லஸ்டன் டென்னிஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா.


Today's Headlines


* The Tamil Nadu Class 12 exam results will be released as planned on May 9th. The Class 10 and 11 public exam results will be released on May 19th.


 * The Chennai Meteorological Department has reported that a low-pressure area has formed in the central parts of the southern Bay of Bengal on Monday

TEACHERS NEWS
morning, and there is a possibility of heavy rainfall in the Delta districts today.


 * Cooking gas cylinder price increased by Rs. 50: Central government announcement.


 * Rallies in the United States and European countries condemning Trump for imposing high tariffs on world nations.


 * World Boxing Cup: Hitesh has created a historical record by becoming the first Indian boxer to win gold in this series.


 * Charleston Tennis Open: American player Jessica Pegula won the championship title.


Covai women ICT_போதிமரம்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459