இந்தியா மற்றும் தமிழகத்தில் இப்போது இயற்கையான மண்பானை ஏர் கூலர்களின் (Natural Mud Pot Air Cooler) பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏர் கூலர் தெரியும், அது என்னப்பா மண்பானை ஏர் கூலர்? என்று சிலர் கேள்வி எழுப்புவது எங்களுக்கு இங்கே கேட்கிறது. இந்த வருட கோடை காலத்தில் இந்த மண்பானை ஏர் கூலர் (Mud Pot Air Cooler) தான் சூப்பர் டிரெண்டாக உள்ளது மக்களே. வெறும் ரூ. 2000 விலை ரேஞ்சில் இப்போது இவை விற்பனைக்கு வாங்க கிடைக்கின்றன.
இந்த மண்பானை ஏர் கூலர் (mud pot air cooler) எப்படி இயங்குகிறது? இதன் செயல்பாடு எத்தகையது? இதன் விலை மற்றும் விற்பனை விபரங்கள் போன்ற உங்கள் சந்தேகத்திற்கான முழு தகவலையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளல்லாம்.
கோடை காலம் வந்துவிட்டாலே மண்பானை வியாபாரம் (mud pot) சூடுபிடிக்க துவங்கிவிடும். சென்ற வருடம் வழக்கமான மண்பானைக்கு பதிலாக மண்பானைகளில் குழாய் (tap fixed mud pots) வைத்த புது மாடல் அறிமுகமானது.
இந்தியா மற்றும் தமிழகத்தில் இப்போது இயற்கையான மண்பானை ஏர் கூலர்களின் (Natural Mud Pot Air Cooler) பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏர் கூலர் தெரியும், அது என்னப்பா மண்பானை ஏர் கூலர்? என்று சிலர் கேள்வி எழுப்புவது எங்களுக்கு இங்கே கேட்கிறது.

இந்த வருட கோடை காலத்தில் இந்த மண்பானை ஏர் கூலர் (Mud Pot Air Cooler) தான் சூப்பர் டிரெண்டாக உள்ளது மக்களே. வெறும் ரூ. 2000 விலை ரேஞ்சில் இப்போது இவை விற்பனைக்கு வாங்க கிடைக்கின்றன.
இந்த மண்பானை ஏர் கூலர் (mud pot air cooler) எப்படி இயங்குகிறது? இதன் செயல்பாடு எத்தகையது?
இதன் விலை மற்றும் விற்பனை விபரங்கள் போன்ற உங்கள் சந்தேகத்திற்கான முழு தகவலையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளல்லாம். கோடை காலம் வந்துவிட்டாலே மண்பானை வியாபாரம் (mud pot) சூடுபிடிக்க துவங்கிவிடும். சென்ற வருடம் வழக்கமான மண்பானைக்கு பதிலாக மண்பானைகளில் குழாய் (tap fixed mud pots) வைத்த புது மாடல் அறிமுகமானது.
natural-mud-pot-air-cooler
பிறகு, மணலில் செய்யப்பட்ட வாட்டர் பாட்டில்கள் (mud water bottle) பிரபலமானது. இயற்கையான மண்பானை தண்ணீரின் சுவையை கைக்கு அடக்கமான சிறிய மண் பாட்டில் (mud bottles) மூலம் ருசிக்க இந்த புது வகை மண்பாண்ட வாட்டர் பாட்டில்கள் வழிவகுத்தன. இந்த வரிசையில், இந்த ஆண்டு கோடை காலத்தின் புது வரவாக மண்பானை ஏர் கூலர் சாதனங்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்போது இது பட்டி தொட்டியெல்லாம் கலக்கிக்கொண்டிருக்கிறது.
கடந்த வருடங்களில் மண்பானையில் வெறும் தண்ணீர் குழாயை மட்டும் ஃபிட்டிங் செய்து விற்பனை செய்த மண்பாண்ட வியாபாரிகள், இந்த ஆண்டு ஒரு படி மேலே சென்று, மண்பானையை ஏர் கூலர் (air cooler) சாதனமாக மாற்றியுள்ளனர். சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள் என்றாலும், அவை எல்லாம் பல ஆயிரங்கள் செலவாகுகின்றன.
எல்லோராலும் 20,000 அல்லது 50,000 என்று செலவு செய்திட முடியாது.மக்களை வெப்பத்தில் இருந்து காப்பாற்ற மலிவு விலையில் ஒரு புதிய ஏர் கூலர் சாதனம் வேண்டும் என்பதை உணர்ந்த வியாபாரியின் ஐடியா தான் இந்த மண்பானை ஏர் கூலர்.
உண்மையில், இது கிராமப்புற மக்கள் முதல் நகரத்தில் வாழும் அணைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான ஒரு உன்னத படைப்பாக இருக்கிறது
. இந்த மண்பானை ஏர் கூலர் சாதனம் எப்படி இயங்குகிறது என்று இப்போது தெரிந்துகொள்ளலாம்.
வழக்கமான மண்பானையில் அடிப் பாதியை நீர் நிரப்பி வைப்பதற்கான இடமாக பயன்படுத்தியுள்ளனர். பானையின் நடுப்பகுதியில் காற்று வெளியே செல்வதற்காக ஒரு சிறிய சதுர வடிவ துளை அமைக்கப்பட்டுள்ளது. பானையின் மேல் பரப்பில், ஒரு எலெக்ட்ரிக் ஃபேன் (electric fan) பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே மண்பானையில் வைக்கப்படும் தண்ணீர் வேகமாக குளிர்ச்சியடைந்துவிடும். இந்த பானையில் எலெக்ட்ரிக் ஃபேன் கூட இருப்பதினால், நீர் இன்னும் வேகமாக கூடுதல் குளிர்ச்சியடைகிறது.
குளிர்ந்த நீரில் ஃபேன் காற்று பட்டு, துளை வெளியாக குளிர்ந்த காற்றை உங்கள் அறைக்கு தருகிறது.
இதற்கு மேல் ஈரமாக சாக்கு அல்லது துணியை சுற்றினால், வெளியில் வரும் காற்றின் குளுமை இன்னும் அதிகமாக இருக்கும் என்கின்றனர் இந்த மண்பானை ஏர் கூலர் சாதனத்தை விற்பனை செய்பவர்கள். இது இயற்கையான காற்றை குளுமைப்படுத்தி தருகிறது. இதற்கு மின்சார செலவும் குறைவானது.
இந்த மண்பானை ஏர் கூலர் (mud pot air cooler) சாதனம் இப்போது 3 சைஸ்களில் வாங்க கிடைக்கின்றன. உங்கள் அறையின் அளவிற்கு ஏற்ற மாடலை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.
1. சிங்கிள் ஃபேன் உடன் வரும் மண்பானை ஏர் கூலர் விலை ரூ. 2600
2. டபுள் ஃபேன் மண்பானை ஏர் கூலர் மாடலின் விலை ரூ. 3900
3. ஜம்போ மாடல் மண்பானை ஏர் கூலர் மாடல் விலை ரூ. 6000சிறிய கடைகள் முதல் பெரிய வீடுகள் வரை இப்போது மக்கள் இந்த மண்பானை ஏர் கூலர் (mudpot air cooler) சாதனத்தை அதிகமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment