விபத்தில் ஒரே பள்ளியே சேர்ந்த இரு ஆசிரியர்கள் உயிரிழப்பு😭😥
ராசிபுரம் அருகே வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் பைக் மீது எதிரே வந்த ஆட்டோ மோதி வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் விலங்கியல் ஆசிரியர் தனசேகரன் என்பவர் உயிரிழந்தார் . அவருடன் ஸ்கூட்டரில் வந்த சசிகுமார் என்ற அதே பள்ளியின் மற்றொரு ஆசிரியரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் இன்று உயிரிழந்தார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு இதே பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் ஜெயபாலன் என்பவர் மக்களவைத் தேர்தல் பணி பயிற்சிக்கு சென்று திரும்பிய போது காளப்பநாயக்கன்பட்டி அருகே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment