School morning prayer activities 18.3.2025 - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/03/2025

School morning prayer activities 18.3.2025

 திருக்குறள் 

பால் : பொருட்பால்                                                                                       

இயல்: குடியியல்   

அதிகாரம் :பண்புடைமை


குறள் எண்:991


 எண்பகத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மட்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு.


பொருள்:

எவரிடத்தும் எளிதாக நட்புக்கொண்டு இனிதாக கலந்துரையாடுதல், பண்புடைமை என்ற நடத்தையைத் தரும்.


பழமொழி :

The fool seeks the wealth but the wise the virtue


அஞ்ஞானி செல்வத்தை தேடுகிறான் ஞானிகளோ நற்குணங்களை அடைய நாடுகிறார்கள்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.


2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.


பொன்மொழி :


வெற்றியாளர்கள் ஒருபோதும்  இழப்பதில்லை, ஒன்று வெல்கிறார்கள்  அல்லது  கற்கிறார்கள்!----மகாத்மா காந்தி


பொது அறிவு : 


1. நோபல் பரிசு எப்போதும் எந்த தினத்தில் வழங்கப்படும்?


விடை : டிசம்பர் 10


2. உலகில் மிக அதிகமாக‌ விளையும்‌ காய்கறி எது?


விடை : உருளைக்கிழங்கு

English words & meanings :


 Lawyer.    -      வழக்கறிஞர்

 

Musician.   -    இசையமைப்பாளர்


வேளாண்மையும் வாழ்வும் : 


 உணவில்லாமல் ஒரு வாரம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. ஒரு கிராம் தங்கத்தைவிட ஒரு டம்ளர் தண்ணீரின் மதிப்பு அதிகம் என்பது ஒவ்வொருவரும் உணர வேண்டும்.


மார்ச் 18 இன்று


ரூடோல்ப் டீசல் அவர்களின் பிறந்த நாள்


ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (பி. மார்ச் 18, 1858 - செப்டம்பர் 29, 1913) ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.


நீதிக்கதை


சிலந்தியிடம் பாடம் கற்ற அரசர்


போரில், அரசர் ஒருவர் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவரின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவரால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றார். 


தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவரை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தார். அதனால் அவர் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டார்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டார். மனச்சோர்வினால் துணிவு இழந்தார். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தார். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. 


அந்த சிறிய சிலந்தியின் செயல் அவரின் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.


இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச்சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?


நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினார். மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தார். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தார்.


தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினார். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தார். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றார். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றார். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவர் என்றுமே மறக்கவில்லை.


நீதி: முயற்சிகள் எப்போதும் தோற்பதில்லை. 

இன்றைய செய்திகள்  - 18.03.2025


* இந்திய ராணுவத்தில், அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


* குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரலில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்.


* போலி பாஸ்போர்ட், விசா மோசடிக்கு 7 ஆண்டு சிறை: மக்களவையில் புதிய குடியுரிமை மசோதா தாக்கல்.


* இந்தியா - நியூசிலாந்து இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து.


* ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி: தென்கொரிய வீராங்கனை அன்சே யங் சாம்பியன் பட்டம் வென்றார்.


* இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் பிரிட்டனின் ஜேக் டிராப்பர்.


Today's Headlines


* In the Indian Army, applications are invited for Agniveer jobs. You can apply for any two categories simultaneously based on merit.


* Group-1, Group-4 Examination announcement will be released in April: DNBSC President SK Prabhakar Information


* Seven years in prison for fake passport, visa fraud: filed a new citizenship bill in Lok Sabha.


* A Defense Agreement is signed between India and New Zealand.


 * In All India badminton tournament South Korean player  Anse-young won the championship


Indianwells Open International Tennis Tournament: Britain's Jack Dropper won the championship.


Covai women ICT_போதிமரம்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459