பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிவிப்பு :
14 ஆண்டு தற்காலிக வேலையை, 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை கைவிட்டு பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் சொன்னபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் இந்த பட்ஜெட்டையொட்டி கோரிக்கை மனுக்களை தினமும் அனுப்பி வருகின்றனர்.
நீண்கால கோரிக்கையை இந்த பட்ஜெட்டில் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வார் என 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்ப்போடு உள்ளோம்.
தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக
3700 உடற்கல்வி,
3700 ஓவியம்,
2 ஆயிரம் கணினி அறிவியல்,
1700 தையல்,
300 இசை,
20 தோட்டக்கலை,
60 கட்டிடக்கலை,
200 வாழ்வியல்திறன் ஆகிய பாடங்களில் பணிபுரிகின்ற பணியிடங்களை நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே 12 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும்.
பகுதிநேர ஆசிரியர்களின் கஷ்டங்கள் அனைத்தும் முதல்வருக்கு தெரியும்.
பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுத்தது, கடந்த 10 ஆண்டாக பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கைக்கு குரல் கொடுத்து நம்பிக்கை கொடுத்த முதல்வரை தான் மலை போல் நம்பி உள்ளோம்.
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முன்னேற்ற முதல்வரால் மட்டுமே முடியும்.
இந்த பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்து விட்டால் முதல்வருக்கு பாராட்டு விழாவை இந்த 12 ஆயிரம் குடும்பங்களும் எடுப்போம்.
--
எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203
No comments:
Post a Comment