அக்காளிடம் பிரம்பை கொடுத்து சிறுவனை அடித்த விவகாரம்: தலைமை ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/03/2025

அக்காளிடம் பிரம்பை கொடுத்து சிறுவனை அடித்த விவகாரம்: தலைமை ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம்!


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 1 ஜமீன்முத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை 5 சேர்ந்த 8 வயது சிறுவன் 3ம் வகுப்பு படித்து வருகி றான். அதே பள்ளியில் அவனது அக்காள் 8ம் வகுப்பு படித்து வருகிறாள். இதற்கிடையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து சிறுவன்வீட்டிற்கு சென்றான். அப்போது பெற்றோரிட ம் வலிப்பதாக கூறி அடித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் உட லில் பார்த்தபோது காயங்கள் இருந்து உள்ளது. இது குறித்து கேட்டதற்கு பள்ளி தலைமை ஆசிரியை கூறி, அக்காள் அடித்ததாக கூறினான். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். 


இதை அறிந்த பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொ ண்டனர். விசாரணையில் வகுப்பில் சிறுவன் குறும்பு செய்ததால், அதே பள்ளியில் படிக்கும் அக்காளிடம் பிரம்பை கொடுத்து தலைமை ஆசிரியை அடிக்க வைத்தது தெரிய வந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். மேலும் தலைமை ஆசிரியை, வகுப்பு ஆசிரியை, சிறுவன் மற்றும் அவனது அக்காளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சிறுவனை அடிக்குமாறு தலைமை ஆசிரியை கூறியது உறுதி செய்யப்பட்டது.


இதை தொடர்ந்து தலைமை ஆசிரியை திலகவதி, போடிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459