பணி நேரத்தில் அரசு ஊழி யர்கள் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது. இதற்கு தேவையான வழி காட்டுதல்களை உருவாக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மண்டல சுகா தார (பணிமனை) அலுவல கத்தில் கண்காணிப்பாள ராக பணியாற்றும் ராதிகா, தன்னை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் விசாரித்தார். அரசு கூடுதல் வக்கீல் சதீஷ் குமார் ஆஜராகி, "மனுதா ரர் மீது ஏராளமான குற்றச் சாட்டுகள் உள்ளன. அவர் தன்னுடன் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணி யாளர்களிடம் மிகவும் கடு மையாகவும், தேவையற்ற முறையிலும் நடந்து கொள் கிறார். தொடர்ந்து பல முறை இதுபோல் நடந்து கொண்டதால் அவர் எச்சரிக்கப்பட்டுள்ளார். செல்போனில் வீடியோ எடுத்தது தொடர்பாக வாட்ச்மேனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் காயமடைந்து மருத்துவம னையில் சிகிச்சை பெற்றுள் ளார்" என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி யிருப்பதாவது:
மனுதாரர் மீதான புகார் குறித்து விசாரிக்க இந்த நீதிமன்றம் விரும்ப வில்லை. ஏனெனில் குற் றச்சாட்டு குறித்து ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான அதிகாரிகள் உரிய நேரத் தில் விசாரித்துள்ளனர். அரசு ஊழியர்கள் அலுவ லகபணிநேரங்களில் செல் போன் பயன்படுத்துவது இயல்பானதாகி வருகிறது. அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத் து வதும், செல்போன் மூலம் வீடியோ எடுப்பதும் நன்னடத்தை மீறல் ஆகும். அரசு ஊழியர்கள் பணிநே ரத்தில் அலுவலகத்திற்குள் இருந்துகொண்டு தங்களது சொந்த பயன்பாட்டிற் காக செல்போன் பயன்ப டுத்துவதை அனுமதிக்கக் கூடாது. அவசரத் தேவை யெனில், மேலதிகாரிகளி டம் முறையான அனுமதி பெற்ற பிறகே செல்போன் பயன்படுத்த வேண்டும். அப்போதும் யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில், செல்போனை அணைத்தோ, அதிர்வு நிலையிலோ. ஒலி எழுப் பாத வகையிலோ தான் வைத்திருக்க வேண்டும்.
அரசு அலுவலங்களில் குறைந்தபட்ச ஒழுக்கத் தையாவது கடைபிடிக்க வேண்டும். அலுவலகத்திற்குள் செல்போன் கேமரா பயன்படுத்துவது இடையூறை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை அரசு கவ னத்தில் எடுத்துக் கொண்டு தேவையான நடவடிக்கை கள் எடுக்க வேண்டும். பணிக்கு வருவோரின் செல்போன்களை பொது வாக ஒரு இடத்தில் பாது காத்து வைத்திடும் வகை யிலும், அவசர நேரத்திற்கு ஒரு பொதுவான ஒரு எண்ணை பயன்படுத்திடும் வகையிலும் உரிய சுற்றறிக் கையை வழங்கவேண்டும். அரசு பொது ஊழியர் ஒருவர் தனது பணிநேரத் தில் அலுவலகத்திற்குள் செல்போன் பயன்படுத்த வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அலுவலகத்திற்குள் செல்போன் பயன்படுத்தும் ஒழுங்கீனமான செயல்கள் தொடர்கின்றன. பொது மக்களின் வரிப்பணத்தின் மூலம் அதிகம் சம்பளம் பெறும் இவர்கள் பெரும் பயத்தை ஏற்படுத்துகின்ற னர். அரசு பணியாளர் விதிப்படி, அரசு ஊழியர் கள் செல்போன் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. மனுதா ரர் மீதான குற்றச்சாட்டின் தீவிரம் கருதி, விதிகளை பின்பற்றி முறையாக விசா ரணை நடத்த வேண்டும். எனவே, மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்ப டுகிறது.
அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அலுவலக வளா கத்திற்குள் செல்போன் மற் றும் செல்போன் கேமரா பயன்படுத்துவோர் மீது தேவையான நடவடிக்கை எடுத்திடும் வகையிலான உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் சுற்றறிக்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர், பொது சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுகாதார போக் குவரத்து துறை இயக்குநர் ஆகியோர் தங்களுக்கு கீழுள்ள அலுவலர்களுக்கு கொடுக்க வேண்டும்.
அரசு அலுவலர்கள் பணி நேரத்தில் செல் போன் மற்றும் செல்போன் கேமரா பயன்படுத்துவது தொடர்பான ஒழுங்கு முறைகளை உருவாக்க வேண்டும். அலுவலக பணி தொடர்பாக பேசுவ தற்கென தனி செல்போன் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்துவது தொடர் பாக 4 வாரத்திற்குள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை ஏப். 13ல் தாக்கல் செய்ய வேண் டும்.
இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.
No comments:
Post a Comment