வட்டாரம் கல்வி அலுவலர்களே தந்த 'சேலஞ்ச்' பள்ளிகள் பட்டியல் :விழிபிதுங்கும் தலைமை ஆசிரியர்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/03/2025

வட்டாரம் கல்வி அலுவலர்களே தந்த 'சேலஞ்ச்' பள்ளிகள் பட்டியல் :விழிபிதுங்கும் தலைமை ஆசிரியர்கள்

 தமிழகத்தில் கற்றல் திறனில் தேர்ந்த பள்ளி கள் அமைச்சர், இணை இயக்குனர் ஆய்வுக்கு அழைக்க சவால் விடலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறிய நிலையில், அந்தந்த கல்வி மாவட்டங்களில் வட்டாரக்கல்வி அலுவலர்களே சேலஞ்ச் பள்ளிகள் பட்டியலை அனுப்பியுள்ளனர். பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தலைமை ஆசிரியர் கள் விழிபிதுங்குகின்றனர்.


தமிழகத்தில் கற்றல் திறனில் தேர்ந்த துவக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங் கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வர அமைச்சர், இணை இயக்குனருக்கு சவால் விடலாம் என அமைச்சர் மகேஷ் கூறினார். இந்நிலையில் அந்தந்த கல்வி மாவட்டங்களில் வட்டாரங்களில் கற்றல் திறனில் தேர்ந்த பள்ளிகளை வட்டாரக்கல்வி அலுவலர்கள் கணக்கெடுத்து அந்தந்த டி.இ.ஓ.,க்களிடம் பட்டியல் அளித்து வருகின்றனர்.


ஒன்றாம் வகுப்பு என்றால் எழுத்து தெரிவது, 2வது வகுப்பு என்றால் இரண்டு எழுத்து வார்த்தை, மூன்றெழுத்து வார்த்தை, அடிப்படை கணக்குகள், 3, 4 வகுப்பு என்றால் நூறு வரை எண் கள் சொல்வது, 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வரை 1000ம் வரை எண் கள், பெருக்கல், வகுத்தல், சொற்றொடர் வாசிப்பது போன்றவற்றை ஆய்வு செய்வர்.


அமைச்சர் இந்த சவாலை தலைமை ஆசிரியர்களுக்கு தான் விட்டுள்ளார். ஆனால் சவாலுக்கு தயாராகாத தலைமை ஆசிரியர்களின் பள்ளிகளையும் கல்வி அலுவலகங்கள் பட்டியலில் இணைத்துள்ளதாக 'ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.


பள்ளிக்கு நேரில் வந்து அமைச்சர் ஆய்வு செய்வது நல்ல விஷயம் என்றாலும், தற்போது தேர்வு மாதம்


. துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு உள்ளது. சவாலுக்கு தயாராகாத தலைமை ஆசிரியர்களையும் இணைத்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459