அனைத்து தரப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு EPF பங்களிப்புகள் செய்யப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு மாதமும், ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் தங்கள் அடிப்படை மற்றும் அகவிலைப்படியில் 12% தொகையை EPF-க்கு பங்களிக்க வேண்டும். இந்நிலையில் நடப்பாண்டிற்கான PF வட்டி விகிதம் குறித்து அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இன் மத்திய அறங்காவலர் குழு இன்று (28-02-2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கான EPFO வட்டி விகிதம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதன்படி “முந்தைய நிதியாண்டில் (2023-24), EPFO மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 8.25% வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், 2024-25 நிதியாண்டிலும் அதே வட்டி விகிதம் தொடரும் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது”.
No comments:
Post a Comment