ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வில் இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிகளுக்கான 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மார்ச் 28-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு முதல்கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, ஜனவரி 22 முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான 2-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கiலந்தாய்வு மார்ச் 28-ம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். இதற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதுகுறித்த தகவல் சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மட்டும் தெரிவிக்கப்படும். இதற்காக தனியாக அழைப்பாணை எதுவும் அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment