கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2025 -26 மாணவர் சேர்க்கை தொடக்கம் - விண்ணப்பிப்பது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/03/2025

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2025 -26 மாணவர் சேர்க்கை தொடக்கம் - விண்ணப்பிப்பது எப்படி?

 

 

a229f5f676a9953716c4e512b45e61a61741843877053113_original

நாடுமுழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2025-26 மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் செயல்படும் கேந்திரிய வித்யாலயா (KV) பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பால்வதிகா (KG) மற்றும் 1-ம் வகுப்பில் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. விண்ணப்பங்கள் மார்ச் 21, 2025 வரை ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும்.


kumari To Kashmir Train: கோடை வெயில் வாட்டுதா? குமரி டூ காஷ்மீர்.. 130 கிமீ வேகம், இனி ஒரே ரயில், ரூ.1000 போதும், குளுகுளு சம்மர் ட்ரிப்


பால்வதிகா வகுப்புகள்

KV பள்ளிகளில் Pre-KG, LKG, UKG வகுப்புகளாக பால்வதிகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


வயது வரம்பு (31.03.2025 தேதியின்படி):


பால்வதிகா-1-க்கு 3 முதல் 4 வயது


பால்வதிகா-2 -க்கு 4 முதல் 5 வயது


பால்வதிகா-3 -க்கு 5 முதல் 6 வயது ஆகும்.


விண்ணப்பிக்க : https://balvatika.kvs.gov.in/


1-ம் வகுப்பு சேர்க்கை

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேர 6 முதல் 8 வயதிற்குள் குழந்தைகள் இருக்க வேண்டும். ஏப்ரல் 1, 2025 பிறகு 6 வயது முடிந்தால் சேர்க்கை கிடையாது.


விண்ணப்பிக்க: https://kvsonlineadmission.kvs.gov.in



முக்கிய தேதிகள்

விண்ணப்ப தொடக்கம்: 07.03.2025 (காலை 10 மணி)


விண்ணப்ப கடைசி நாள்: 21.03.2025 (இரவு 10 மணி)


தேர்வான மாணவர்களுக்கான முதல் தேர்வு பட்டியல்: 25.03.2025 (1-ம் வகுப்பு) 26.03.2025 (பால்வதிகா)


Sri Brinda Theatre closed :மூடு விழா கண்ட ரஜினி தியேட்டர்! சோகத்தில் ரசிகர்கள்! அடுத்து என்னவாக போகுது?


மேலும் காலி இடங்கள் இருக்கும் பட்சத்தில் அடுத்த அடுத்த பட்டியல்கள் வெளியிடப்படும்.


இரண்டாம் பட்டியல்: 02.04.2025


மூன்றாம் பட்டியல்: 07.04.2025


கட்டணம் விவரம்

அட்மிஷன் கட்டணம்: ரூ.25


மாத சந்தா: ரூ 500 (Vidyalaya Vikas Nidhi)


கணினி கட்டணம்: ரூபாய் 100 (3-ம் வகுப்பு முதல்) பெண்களுக்கு கல்விக் கட்டணம் இல்லை


9, 10-ம் வகுப்பு ஆண் மாணவர்கள்: மாதம் ₹200


தேவையான ஆவணங்கள்

பிறப்பு சான்றிதழ்


வகுப்பு பிரிவு சான்றிதழ் (Community Certificate)


முகவரி சான்றிதழ் (ஆதார், வாக்காளர் அட்டை)


குழந்தையின் புகைப்படம்


பெற்றோர் பாதுகாப்புத்துறை பணியாளராக இருந்தால் அதன் சான்றிதழ்

திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி 

இதனை தொடர்ந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியுள்ளன. திருவாரூர் KV பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7010789249 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459