TRB - ஓவிய ஆசிரியர்கள் நியமனம் 14ல் சான்றிதழ் சரிபார்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/02/2025

TRB - ஓவிய ஆசிரியர்கள் நியமனம் 14ல் சான்றிதழ் சரிபார்ப்பு

 1739245775008

'நீதிமன்ற வழக்குகளால் நிறுத்தி வைக்கப்பட்ட, ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும் 14ம் தேதி நடக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


அதன் அறிவிப்பு:


கடந்த 2012 முதல் 2016 வரை, பள்ளிக் கல்வி உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள சிறப்பாசிரியர்களில், ஓவிய ஆசிரியர் பணிக்கு நேரடி ஆள் சேர்ப்புக்கு, கடந்த 2017 ஜூலை 26ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வுகள் செப்., 23ல் நடந்தன.


தேர்வு முடிவுகள், 2018 ஜூன் 14ல் வெளியிடப்பட்டன. சிறப்பாசிரியர் காலி இடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல், 2018 அக்., 12ல் வெளியானது. இதையடுத்து நடந்த வழக்குளில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, மாற்றப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியல், 2019, அக்., 18ல் வெளியிடப்பட்டது.


கடந்த, 2020, மார்ச் 16ல், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில், தற்காலிக தேர்வு பட்டியல், தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில், 2021, அக்., 12ல் வெளியிடப்பட்ட பட்டியல் திருப்ப பெறப்படுகிறது. வரும் 14ம் தேதி, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.


தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் தயாரிப்பு மற்றும் வெளியீடுகளில்,


மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் பிழைகள் சுட்டி காட்டப் பட்டால் அவற்றைத் திருத்த, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உரிமை உண்டு.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459