தொடரும் ஓய்வூதிய நாடகங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/02/2025

தொடரும் ஓய்வூதிய நாடகங்கள்

 .com/


10 இலட்சம் அரசு ஊழியர் - ஆசிரியர் - பொதுத்துறைப் பணியாளர் குடும்பங்களின் வாழ்வாதார நம்பிக்கையைப் பாடையில் ஏற்றி, Pension நாடகமாடும் திமுக!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


2003-ல் தாம் பறித்த பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான  வல்லுந‌ர் குழுவை, தொடர் காத்திருப்புப் போராட்டங்களின் காரணமாக 22.02.2016-ல் அமைத்தது அப்போதைய அஇஅதிமுக அரசு. பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் 7 முறை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இறுதியாக 27.11.2018-ல் வல்லுநர் குழு தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. 2021 ஏப்ரல் வரை ஆட்சியிலிருந்த அஇஅதிமுக இதில் அடுத்த கட்டமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழுவின் அறிக்கையையும் வெளியிடவில்லை.


ஆட்சிக்கு வந்தவுடன் பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று போராட்டக் களந்தோறும் வந்து வாக்களித்ததோடே, 309-வது தேர்தல் வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த திமுகவின் விடியலரசு 2021-22 பட்ஜெட்டின்  ஓய்வூதியம் தொடர்பான மானியக் கோரிக்கைக் கொள்கை விளக்கத்தில் வரிசை எண் 11-ல் வல்லுநர் குழு எனும் தலைப்பில் தனது அதிகாரப்பூர்வ முதல் பதிலை அளித்தது.


அதனைத் தொடர்ந்து கடந்த 2024-25ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 4 ஆண்டுகளாக ஓய்வூதிய மானியக் கோரிக்கை கொள்கை விளக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் விடியலரசு பல்வேறு அதிரடி அச்சு

 வேலைவாய்ப்பு செய்திகள் 2024

மாற்றங்களைச் செய்து வந்தது. அதன் விபரம் பின்வருமாறு. . . .


2021-22  பத்தி எண்.11:


தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசு பணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவுகளை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016 ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையினை 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

2022-23 பத்தி எண்.12:


தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசு பணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான *முடிவினை* மேற்கொள்ள *அரசிற்* பரிந்துரைக்க ஏதுவாக *2016-ஆம்* ஆண்டில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையினை 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அது அரசின் தீவிரபரிசீலனையில் உள்ளது.


2023-24 பத்தி எண்.9:


வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசுபணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவினை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016-ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையானது 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


2024-25 பத்தி எண்.8:


வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசுபணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவினை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016-ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.


ஒட்டுமொத்தமாகக் கடந்த 4 நிதிநிலை அறிக்கையில் விடியலரசானது தனது கொள்கை விளக்கக் குறிப்பேட்டினில்,


அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. . . .


அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. . . .


அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. . . .


அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. . . .


என்று மாற்றி மாற்றி அச்சடித்துக் கூறிவந்ததே அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும், மின்வாரியம், போக்குவரத்து உள்ளிட்ட த.நா பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களையும் ஏமாற்றிக் காலத்தைக் கடத்தத்தான்  என்பது, 04.02.2025ல் வெளியான தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீட்டு எண் 271ன் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.


ஆம். 2016ல் அமைத்து 2018ல் இறுதியான பழைய ஓய்வூதியத் திட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பரிசீலித்து வருவதாக 2021 முதல் 2025 வரை 4 ஆண்டுகளாகக் கூறி வருடாவருடம் சட்டசபையில் மாற்றி மாற்றி வாசித்துக் காட்டிய கொள்கைவிளக்கக் குறிப்பிற்கே முரணாகவும்,

TEACHERS NEWS
தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு நேர்மாறாகவும்  OPS - CPS - UPS பற்றி ஆராய புதிதாக 3 நபர் அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.


என்பதேயன்றி வேறென்னவாக இருக்கக்கூடுமென்பதே அரசு ஊழியர்களின் உள்ளக்குமுறலாக உள்ளது.


நம்பி வாக்களித்தோர் இப்படியென்றால் நம்பிக்கை காட்டி கூட்டி வந்த சங்கத் தலைமைகளில் சிலரோ இவ்வளவு நடந்தும் ஆட்சியாளர்கள் மீதான தமது 100% நம்பிக்கையில் துளியளவும் குறையவில்லையென கூட்டங்கூடி அறிவித்து வருகின்றனர். இவர்களது நம்பிக்கை அறைகூவல், 'எப்படியும் தூக்குக் கயிற்றைத் தேடித்தந்துவிடுவார் காத்திருங்கள்' என்பதாக உள்ளதே அன்றி உண்ட நஞ்சிற்கான முறிவு மருந்தாக இல்லவேயில்லை என்பதே கள எதார்த்தமாக உள்ளது.


நச்சு முறிவு மருந்து ஒன்றே!


அஃது

ஒன்றுபட்ட  உறுதியான போராட்டமே!!


அதுவரை,

ஓய்வூதிய நாடகங்கள் தொடர்கதையே!!!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459