பொதுத்தேர்வுக்கான ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/02/2025

பொதுத்தேர்வுக்கான ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

 1349757

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் பிப்.13-ம் தேதி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்காக சமுக பங்களிப்பு நிதியின் கீழ் 2022 முதல் 2024-ம் ஆண்டு வரை ரூ.500 கோடிக்கும் அதிகமாக நிதி வந்துள்ளது. தமிழக அரசின் மீதான நம்பிக்கையின் காரணமாக இந்த அளவுக்கு நிதி கிடைத்துள்ளது. அதைக்கொண்டு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய நினைப்பவர்கள் பணமாக இல்லை என்றாலும் பள்ளிகளில் பாடம் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களைக் கற்றுதரலாம்.


10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் பிப்.13-ம் தேதி நடத்தப்பட உள்ளது.


இதில் துறைசார்ந்த இயக்குநர்கள், முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பொதுத்தேர்வை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காதபடி சிறப்பான முறையில் நடத்தி முடிப்பதற்கான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459