கணினி பயிற்றுநர் பணியிடம் தரம் உயர்த்தப்பட்டது - அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/02/2025

கணினி பயிற்றுநர் பணியிடம் தரம் உயர்த்தப்பட்டது - அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

கணினி பயிற்றுநர் பணியிடம் தரம் உயர்த்தப்பட்டது - அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்வித் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்த பள்ளி ஒன்றுக்கு ஒரு கணினி பயிற்றுநர் (Computer Instructor) பணியிடம் தோற்றுவிக்க அரசு முடிவெடுத்து அதன் படி மேல்நிலைப் பிரிவுகளுக்கான கணினி ஆசிரியர்களது கல்வித் தகுதியினை NCTE Regulations 2014 ன்படி நிர்ணயித்து 814 கணினி பயிற்றுநர் நிலை-2 காலிப்பணியிடங்களை நிலை உயர்த்தியும் கணினி பயிற்றுநர் நிலை-2 பணியிடத்தில் பணியாற்றுபவர்ளில் முதுகலை கணினி ஆசிரியர் கல்வித்தகுதி பெற்றவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களாக தரம் உயர்த்தவும் அனுமதி அளித்து பார்வை 1-இல் காண் ஆணை வெளியிடப்பட்டது. 
ஆனால் அரசாணையின் 2ம் பக்கம் பத்தி 2.(v)-ல் promoted என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதால் இவ்வரசாணையின்படி Computer Instructor Grade-II பணியிடத்தை re-designated செய்யப்பட்டு Computer Instructor Grade-I என பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது எனக் கருதி FR 22(B) அடிப்படையில் பதவி உயர்வுக்கான 3% ஊதிய நிர்ணயம் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டமைக்கு தணிக்கைத் தடைகள் எழுப்பப்பட்டதையடுத்து சார்ந்த கணினி ஆசிரியர்களால் நீதிமன்ற வழக்குகள் 6 W.P.No.27205 etc., Batch cases- 08.03.2024-8 தீர்ப்பாணை பெறப்பட்டது. இந்நிலையில் அரசாணை நிலை எண்26 பள்ளிக்கல்வி (பக.7(1)) த்துறை நாள்.12.02.2019-ல் Promotion என்று குறிப்பிட்டதை


Upgradation என திருத்தம் செய்து பார்வை 2-இல் காணும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459