TNPSC GROUP 4 காலிப்பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/01/2025

TNPSC GROUP 4 காலிப்பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு

 குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


*இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.


*டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஏற்கெனவே 3 முறை காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 41 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.


*தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பட்டு வருகின்றன.


*இதில், டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு 6,244 காலிப்பணியிடங்களுக்கு வெளியானது. அதில் செப்டம்பர் மாதம் 480, அக்டோபர் மாதம் 2,208 மற்றும் 559 என இரண்டு முறை அதிகரிக்கப்பட்டு, ஏற்கனவே 9,491 காலிப்பணியிடங்களுக்கு முடிவுகள் அக்டோபர் 28 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில், தற்போது மேலும் கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனால், மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459