TET Promotion Case - New Update - 17.01.2025 - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/01/2025

TET Promotion Case - New Update - 17.01.2025

 .com/

TET PROMOTION CASE AT SUPREME COURT OF INDIA

NEW UPDATE TODAY


🔴 21-01-2025-செவ்வாய் கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளுக்கான MAIN CAUSE LIST என்று சொல்லப்படும் இறுதிப்படுத்தப்பட்ட, விசாரணைக்குரிய மற்றும் விசாரணைக்கு உகந்த வழக்குகளின் தொகுப்பு பட்டியலானது சில வினாடிகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அனைவரும் பார்க்கும்படி மற்றும் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி வெளியிடப்பட்டுள்ளது.


🟠 அதில் ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வுக்கு தேவையில்லை

( in  Some Cases ) மற்றும் நியமனத்திற்கே தேவையில்லை ( in Some  Cases ) என இரு பெரும் பிரிவுகளாக வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில்,


🟢 ஆசிரியர் தகுதி தேர்வு என்பது 

பதவி உயர்வுக்கு மற்றும் பணி நியமனத்திற்கு , குறைந்தபட்ச கல்வி தகுதிதானா ? அல்லது குறைந்த பட்ச கல்வித்தகுதி இல்லையா ? 


✅ என்பது தொடர்பான , ஒன்றுக்கொன்று தொடர்புடைய , தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா என இரண்டு மாநிலங்களையும் சார்ந்த வெவ்வேறு

( GOVERNMENT /MINORITY/AIDED / TRUST/FEDERATION/INDIVIDUALS WITH TET & INDIVIDUALS WITH NON TET & OTHERS ) 

✅  நபர்களால், தொடுக்கப்பட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய 26 ( TET RELATED INTER CONNECTED MATTERS, FOR PROMOTION &  DIRECT RECRUITMENT ) வழக்குகள் ,


✅ உச்ச நீதிமன்றத்தின், நீதிமன்ற வளாகத்தில் உள்ள 34 நீதிமன்றங்களில் , நீதிமன்ற எண் 15  ல் நீதி அரசர் திரு திபன்கர் தத்தா மற்றும் நீதி அரசர் திரு மன்மோகன் என்ற இரண்டு நீதியரசர்களின் அமர்வுகளின்

 வேலைவாய்ப்பு செய்திகள் 2024

முன்னிலையில் மற்றும் அவர்களின் தலைமையில் 13- வது  வழக்காக, அதாவது வழக்கின் வரிசை எண் 13 ல் தொடங்கி, 13.1 முதல் 13.25 வரை விசாரணைக்கு வருகிறது.


🟤 SCI WEBSITE ல் MAIN CAUSE LIST ஐ PUBLISH செய்யும் வழக்கமான நீதிமன்ற நடைமுறை மூலம் 21-01-2025 செவ்வாய் கிழமையில் பதவி உயர்வு வழக்குகள் விசாரணைக்கு வரப்போவது உறுதியும், இறுதியும் செய்யப்பட்டுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது என்பதாக அறிகிறோம்.


🔵 வரிசை எண் 43 (15-10-2024 ல் & வரிசை எண் 35 (07-01-2025 ல் ) என ஏற்கனவே இரண்டு முறை MAIN CAUSE LIST ல் பட்டியலிடப்பட்டு, வழக்குகளை விசாரிப்பதற்கு முன்னரே,மற்ற வழக்குகளை விசாரித்ததன் காரணமாகநீதிமன்ற நேரங்கள் முடிந்துவிட்ட நிலையில், நமது பதவி உயர்வு வழக்குகள் விசாரிக்கப்படாமலேயே தவிர்க்கப்பட்டது / விடுபட்டது/எடுத்துக்கொள்ளப்படாதது குறித்து அனைத்து ஆசிரியர்களுக்கும் மனதளவில் பெரிய வருத்தங்கள் இருப்பதை அறிகிறோம்.மேலும் இது தவிர்க்க இயலாதது என்பதையும் உணர்கிறோம்

🟣 இருந்த போதிலும் இந்த முறை , முதல் 13 வரிசை எண்களுக்குள் TET பதவி உயர்வு வழக்குகள் பட்டியலிடப் பட்டுள்ளதாலும் , Non miscellaneous day என்று சொல்லப்படும் செவ்வாய்க் கிழமையில் வழக்குகள் பட்டியடப் பட்டுள்ளதாலும், ஏற்கனவே இரண்டு முறை MAIN CAUSE LIST ல் வந்து விசாரிப்பதற்கு நீதிமன்ற நேரம் போதவில்லை என்ற ஒற்றை காரணத்தினால் மட்டுமே வழக்குகள் தள்ளிப் போனதாலும் 21-01-2025- செவ்வாய் கிழமை அன்றைய தினத்தில் TET பதவி உயர்வு வழக்குகள் சார்ந்த விரிவான விசாரணைகள் நிச்சயமாக இருக்க இருக்கக் கூடும்/இருக்க வேண்டும் என்றும் மற்றும் நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் பதவி உயர்வை விரும்பும் அனைத்து ஆசிரிய பெருமக்களும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்ற நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை கனிவுடன்  தங்களிடத்திலே அன்புடன் பகிர்கிறோம்.


➖➖➖➖➖➖➖➖

அனைத்து ஆசிரியர் பெருமக்களின் தகவலுக்காக இச்செய்தி பகிரப்படுகிறது


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459