Paternity Leave - மனைவியின் பிரசவத்திற்கு ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு தந்தைவழி விடுப்பு - RTI Reply - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/01/2025

Paternity Leave - மனைவியின் பிரசவத்திற்கு ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு தந்தைவழி விடுப்பு - RTI Reply

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரு.கே. ஜீவா என்பார் கோரப்பட்ட தகவல்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. (08.09.2023)


1. தந்தைவழி விடுப்பு இரண்டுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட அனைத்து ஆண் பணியாளர்களுக்கு (தகுதிகாண் பருவத்தினர் உட்பட) 15 நாட்களுக்கு விடுப்பு வழங்கத் தகுதியுள்ள ஒரு அதிகாரியால் தந்தைவழி விடுப்பு வழங்கப்படும். அதாவது அவரது மனைவியின் பிரசவத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும்.


2. தந்தைவழி விடுப்பு வேறு எந்த வகையான விடுமுறையுடனும் இணைக்கப்படலாம். 3. தந்தைவழி விடுப்பு, விடுப்புக் கணக்கிலிருந்து பற்று வைக்கப்படாது.


4. தந்தைவழி விடுப்பு குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் பெறப்படாவிட்டால் அத்தகைய விடுப்பு காலாவதியானதாக கருதப்படும்.


பொது தகவல் அலுவலர் மற்றும்


நேர்முக அலுவலர், கல்லூரிக் கல்வி இயக்ககம், Chennai - 600 006.

கல்லூரிக் கல்வித் துறை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459