படிக்கும்போதே வேலைவாய்ப்பு திறனை வளர்க்க ஓராண்டு பயிற்சி திட்டம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/01/2025

படிக்கும்போதே வேலைவாய்ப்பு திறனை வளர்க்க ஓராண்டு பயிற்சி திட்டம்

 1345452

பாலிடெக்​னிக் படிக்​கும் மாணவர்​களின் வேலை​வாய்ப்புத் திறனை அதிகரிக்​கும் வகையில் ஓராண்டு கால தொழில்​ப​யிற்சி திட்டத்தை தொழில்​நுட்பக் கல்வி இயக்​ககம் அறிமுகப்​படுத்தி உள்ளது.


தமிழகத்​தில் 10-ம் வகுப்பு முடிக்​கும் மாணவர்​களில் கணிச​மானோர் பாலிடெக்​னிக் கல்லூரி​களில் 3 ஆண்டு கால பொறி​யியல் டிப்ளமோ படிப்​பில் சேரு​கிறார்​கள். அதேபோல், பிளஸ் 2 முடிக்​கும் மாணவர்கள் ‘லேட்ரல் என்ட்ரி’ முறை​யில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்த்​துக் கொள்​ளப்​படு​கிறார்​கள். அரசு பாலிடெக்​னிக், அரசு உதவி​பெறும் பாலிடெக்​னிக், தனியார் சுயநிதி பாலிடெக்​னிக் என 450-க்​கும் மேற்​பட்ட பாலிடெக்​னிக் கல்லூரி​கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆண்டு​தோறும் ஏறத்தாழ 50 ஆயிரம் மாணவர்கள் பயில்​கின்​றனர்.


ஓரு காலத்​தில் பாலிடெக்​னிக் டிப்ளமோ படிப்​பில் சேர இடம் கிடைப்பது கடினமாக இருந்து வந்த நிலை​யில், அண்மைக் காலமாக பாலிடெக்​னிக் கல்லூரியில் சேரும் மாணவர்​களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு கல்லூரி​யிலும் சிவில், மெக்​கானிக்​கல், எலெக்ட்​ரிக்கல் மற்றும் எலெக்ட்​ரானிக்ஸ், எலெக்ட்​ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என பல்வேறு பாடப்​பிரிவு​களில் சுமார் 300 இடங்கள் இருந்​தா​லும் அதில் 50 சதவீத இடங்களே நிரம்​பு​கின்றன.

இந்நிலை​யில், பாலிடெக்​னிக் டிப்ளமோ படிக்​கும் மாணவர்​களின் வேலை​வாய்ப்புத் திறனை அதிகரிக்​க​வும், இன்றைய தொழில் நிறு​வனங்கள் எதிர்​பார்க்​கும் திறமை உடைய​வர்​களாக அவர் களை உருவாக்​கும் நோக்​கிலும் தொழில்​நுட்ப கல்வி இயக்​ககம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்​கொண்டு வருகிறது. அந்த வகையில், பாலிடெக்​னிக் பயிலும் மாணவர்​களின் வேலை​வாய்ப்புத் திறனை மேம்​படுத்த ஓராண்டு கால தொழில்​ப​யிற்சி திட்​டத்தை (Industrial Training Program) நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்​படுத்​தி​யுள்​ளது.


இத்திட்​டத்​தின்​படி, 3 ஆண்டு கால படிப்​பில் மாணவர்கள் கடைசி ஓராண்டு ஏதேனும் ஒரு தொழில்​ப​யிற்சி மையத்​தில் நேரடி பயிற்சி பெறு​வார்​கள். அந்த மையம் தொழில்​நுட்பக் கல்வி இயக்​ககத்​தின் அனுமதி பெற்​றதாக இருக்​கும். முதல் இரண்டு ஆண்டுகள் பாலிடெக்​னிக் கல்லூரி​யில் படித்து அங்கு தற்போதைய முறை​யில் தேர்​வெழுது​வார்​கள்.


3-ம் ஆண்டு முழு​வதும் கல்லூரிக்கு வெளியே குறிப்​பிட்ட தொழில்​ப​யிற்சி மையத்​தில் பயிற்சி பெறு​வார்​கள். அவர்​களுக்கு சம்பந்​தப்​பட்ட பொறி​யியல் பாடத்​தில் தியரி​யுடன் செயல்​முறை திறன், தகவல் தொடர்​புத்​திறன், நேரடி தொழில்​ப​யிற்சி போன்ற​வற்றுக்கு அதிக முக்​கி​யத்துவம் தரப்​படும்.


அந்த மையத்​தில் மாணவர்​களுக்கு இரண்டு செமஸ்டர் தேர்​வுகள் (அக்​டோபர் மற்றும் ஏப்ரல்) நடத்​தப்​பட்டு

 வேலைவாய்ப்பு செய்திகள் 2024

குறிப்​பிட்ட மதிப்​பெண் (கிரெடிட்) வழங்​கப்​படும். மதிப்​பெண் விவரங்கள் மாணவர்கள் படித்து வந்த பாலிடெக்​னிக் கல்லூரி​யில் சமர்ப்​பிக்​கப்​படும். 3 ஆண்டு மதிப்​பெண் அடிப்​படையில் பொறி​யியல் டிப்ளமோ வழங்​கப்​படும்​. இந்த புதிய திட்​டத்​தில் விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டுமே சேர்த்​துக்​கொள்​ளப்​படு​வர். இத்திட்​டத்​தில் சேர விருப்பம் தெரி​வித்த மாணவர்கள் அதன்​பிறகு பழைய முறைக்கு மாறிக்​கொள்ள முடி​யாது.


இத்திட்​டத்​துக்கான வரைவு வழிகாட்டு நெறி​முறைகளை தொழில்​நுட்​பக்​கல்வி இயக்​ககம் இணையதளத்​தில்


வெளி​யிட்டு இதுதொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்​களின் கருத்து​களை​யும், ஆலோசனை​களை​யும் கேட்டுப்​பெற்றுள்​ளது. இந்த ஓராண்டு கால தொழில்​ப​யிற்சி திட்டம் குறித்து நடப்பு கல்வி ஆண்​டில் (2024-2025) சேர்ந்​துள்ள ​மாணவர்​களுக்கு ​விழிப்பு​ணர்வு ஏற்​படுத்​து​மாறு அனைத்து பாலிடெக்​னிக் கல்லூரிகளின் ​முதல்​வர்​களுக்கு ​மாநில தொழில்​நுட்​பக்​கல்வி ஆணை​யர் டி.ஆபிரகாம்​ அறிவுரை வழங்​கியுள்ளார்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459