அரசு பள்ளிகளை பாதுகாப்போம் !!
தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளி தத்தெடுக்கும் தீர்மானத்திற்கு வரவேற்று நன்றி தெரிவித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் கருத்துக்கு இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு தனது கடும் கண்டனங்களை தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளி சங்கம் இயங்கி வந்த நிலையில் அது அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என உருவாக்கப்பட்டு மாநாடு நடைபெற்றது, இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார். இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுத்து அந்த அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்புகள் அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தரப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் அவர்கள் வரவேற்று பாராட்டுத்தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தின் நோக்கம் அரசு கல்வி நிலையங்களுக்கு செலவு செய்யாமல். இது தனியார் பங்களிப்புடன் நடைபெறும் என்பதாகும். தனியார் நிறுவனங்கள் இலாபத்தை முதன்மையாக கொண்டு இயங்கும் ஒரு நிறுவனம். கல்வியை சேவையாக கருதாமல் விற்பனை பண்டமாக அணுகும் அவலம் தான் நடைமுறையில் உள்ளது. கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழ்நாடு அரசு தப்பிப்பது தனியாரிடம் ஒப்படைத்து நிதி சுமையை காரணம் காட்டுவது என்பது நிர்வாக திறனின்மையை பிரதிபலிக்கும்.
தனியார் பள்ளிகளில் ஏராளமான சிக்கல்கள் இருக்கிறது. கற்றல் கற்பித்தலை அமைச்சர் ஒப்பிடுகிறார், அரசு பள்ளிகளில் முறையான பட்டயப்படிப்பு மற்றும் தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வாகிறார்கள்.நிரம்ப தகுதியான ஆசிரியர்களாக அரசு பள்ளி ஆசியர்கள் இருக்கிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் இது சாத்தியமா? எந்த பட்டபடிப்பு இருந்தாலும் சரி, தகுதி, திறமை, கற்றல்-கற்பித்தல், மாணவர்களை அணுகும் விதம், உளவியல் இது ஏதுமற்ற ஆசிரியர்களாகவே தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தனியார் பள்ளிகள் முழுவதும் பணம் வசூலிக்கும் நோக்கில் செயல்படும் திட்டத்தை முதன்மையாக வைத்து செயல்படுகின்றன.மேலும் தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு என்ன சிறந்ததா? அடிப்படையான விளையாட்டு மைதானமே இன்றி தான் 90சதவீத தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. ஆசிரியர் பற்றாக்குறை என நிர்வாக சிக்கல்கள் பல இருக்கின்றன. இது ஒப்பிடலளவிலே நிராகரிக்கப்பட வேண்டியது. தனியார் பள்ளிகளால் பெற்றோர்கள் கடனாளியாக மாற்றப்பட்டது மட்டுமே நிதர்சனம். தனியார் பள்ளிகள் குறித்தான அமைச்சரின் பேச்சு என்பது அரசு பள்ளிகளுக்கு எந்த வகையிலும் வலுச்சேர்க்காது. மாநில கல்வி உரிமைகள் தான் செயலிழக்கும்
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே முன்னின்று அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்
TEACHERS NEWS |
அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்து வரவேற்றுப் பேசியதை மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் தனது கருத்தை
திரும்பப்பெற வேண்டும், மாநில கல்வி உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது..
தௌ.சம்சீர் அகமது
மாநிலத் தலைவர்
கோ.அரவிந்தசாமி
மாநிலச் செயலாளர்
No comments:
Post a Comment