மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்குவதில் 7 மாத தாமதம்: கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் பெற்றோர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/01/2025

மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்குவதில் 7 மாத தாமதம்: கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் பெற்றோர்

1346193

தமிழகத்​தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி​பெறும் பள்ளி​களில் ஒன்றாம் வகுப்பு மாணவர்​களுக்கு 7 மாதங்கள் கடந்​தும் சீருடை வழங்​காமல் காலதாமதம் ஏற்பட்​டுள்ள​தால் மாணவ, மாணவிகள் விலை கொடுத்து சீருடை வாங்​கும் நிலை ஏற்பட்​டுள்​ளது.


மாநில பாடத்​திட்​டத்​தின்​கீழ் 37 ஆயிரத்து 576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி​பெறும் பள்ளி​களில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்​களுக்கு இலவசசீருடை திட்டம் செயல்​படுத்​தப்​பட்டு வருகிறது. தமிழ்​நாடு டெக்ஸ்​டைல் கார்ப்​பரேஷனிடம் இருந்து துணி​யைப் பெற்று சமூக நலத்​துறை அங்கீகரித்த சொசைட்​டிக்கு வழங்கி சீருடை தைத்து வழங்​கப்​பட்டு வருகிறது.இந்த கல்வியாண்​டில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி​களில் செப்​டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடத்​தப்​பட்​டது. இதில் தொடக்க நிலையான 1-ம் வகுப்பு தவிர மீதமுள்ள அனைத்து வகுப்பு மாணவர்​களுக்​கும் சீருடை வழங்​கப்​பட்​டுள்​ளது. 1-ம் வகுப்​புக்கு மட்டும் 7 மாதங்​களாகி​யும் சீருடை வழங்​காமல் தாமத​மாகி உள்ளதாக பெற்​றோர்​கள், ஆசிரியர்கள் தெரி​வித்​துள்ளனர்.

சமூக நலத்​துறை சார்​பில் சீருடை வழங்​குவது தாமதமான காரணத்​தால் அருகில் உள்ள துணிக்​கடைகளில் ரூ.200 முதல் ரூ.400 வரை ரெடிமேட் சீருடைகளை வாங்கி பயன்​படுத்தி வருவதாக பெற்​றோர்கள் தெரி​வித்​தனர். இதுகுறித்து, சமூக நலத்​துறை அதிகாரிகள் கூறிய​தாவது: ஒவ்வோர் ஆண்டும் பள்ளி​யில் சேரும் ஒன்றாம் வகுப்பு மாணவர்​களின் சீருடை அளவு ஏற்கெனவே படித்த மாணவர்​களின் அளவை வைத்து வழங்​கப்​பட்டு வந்தது.


தற்போது முதல் வகுப்பு மாணவர்​களிடம் அளவு எடுத்து சீருடை வழங்க திட்​ட​மிடப்​பட்​டது. ஆனால், அரசு பள்ளி​களில் மாணவர் சேர்க்கை சரஸ்வதி பூஜை வரை நடைபெற்​றது. அதன் பின்னர் முதல் வகுப்பு மாணவர்​களுக்கு கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) எண் வழங்​கப்​பட்​டது. தொடர்ந்து மாணவர்​களின் விவரங்கள் பெற நவம்பர் மாதமாகி​விட்​டது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச, வேட்டி சேலை வழங்​கு​வ​தில் மும்​முர​மாகி​விட்ட நிலை​யில், தமிழ்​நாடு டெக்ஸ்​டைல் கார்ப்​பரேஷனிடம் இருந்து துணி வாங்​கு​வ​தில் தாமதம் நிலவுகிறது. தமிழ்​நாடு டெக்ஸ்​டைல் கார்ப்​பரேஷன், சமூக நலத்​துறைக்கு சீருடைக்கான துணியை வழங்கி​விட்​டால் சொசைட்டி மூலம் 15 நாட்​களுக்​குள் தைத்து வழங்க திட்​ட​மிட்​டுள்​ளோம்


. இந்த பணிகளை ஜனவரி 25-ம் தேதிக்​குள் முடிக்க திட்​ட​மிட்​டுள்​ளோம்.


ஒன்றாம் வகுப்பு மாணவர்​களுக்கு சீருடை வழங்​கு​வ​தில் ஏற்பட்ட தாமதத்​தை தவிர்க்​கும் வகையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் அளவு செய்​யும் பணியை சமூக நலத்​துறை மேற்​கொண்டு வரு​கிறது. கோவை ​மாவட்​டத்​தில் 4 ஆ​யிரம் பேர் வரைக்​கும், ​மாநில அள​வில் சு​மார் 2.83 லட்​சம் ​மாணவ, ​மாணவி​களுக்கு சீருடைவழங்க வேண்டி உள்​ளது. இவ்​வாறு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459