ஆறு நாட்கள் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நாளை (20ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் தொடர்ந்து, 12 நாட்கள் செயல்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த, 10 ம் தேதி முதல் பனியன் நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டது. சிறப்பு பஸ்கள் இயக்கமும் துவங்கியது. 11 மற்றும், 12ம் தேதி பள்ளிகள் விடுமுறையாக இருந்த போதும், 13ம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் செயல்பட்டன.
இந்நிலையில், 14ம் தேதி முதல், 19ம் தேதி வரை ஆறு நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது.
விடுமுறை முடிந்து நாளை (20ம் தேதி) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. கடந்த, 17 ம் தேதி பொது விடுமுறையாக அரசு அறிவித்ததால், இதற்கு மாற்றாக வரும், 25ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 26ம் தேதி குடியரசு தினம்.
பெரும்பாலான பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்படும். இதனால், 20ம் தேதி முதல் வரும், 31ம் தேதி வரை தொடர்ந்து, 12 நாட்கள் பள்ளி வேலை நாட்கள்; பள்ளிகள் செயல்பட உள்ளது.
No comments:
Post a Comment