ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தவர்கள் உடனடியாக புதுப்பிக்க ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இலவசமாக புதுப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 14, 2025 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் ஒழுங்குமுறை விதிகள்
ஆதார் எண் மற்றும் அட்டை பெறுவதற்காகப் பதிவு செய்யப்படும் விவரங்களில் மோசடியைத் தவிர்க்கவும் ஒழுங்குமுறைப்படுத்தவும் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒழுங்குமுறை விதிகளை ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியது.
அதன்படி, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் எண் அல்லது அட்டை வைத்திருப்போர் பெயர் திருத்தம், தந்தை அல்லது கணவர் அல்லது பராமரிப்பாளர் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கைப்பேசி எண், பிறந்த தேதி, முகவரி போன்றவற்றின் சமீபத்திய தகவல்களை புதுப்பிக்க வேண்டும.
புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
புதிய தகவல்கள் உள்ள வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தைப் பயன்படுத்தி புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கூறியுள்ளது.
மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்கள் அல்லது ஆதார் ஆணையத்தின் கீழ் இயங்கும் சேவை மையத்தில் நேரடியாகச் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.
அல்லது அதிகாரபூர்வ https://myadhaar.uidai.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆவணத்தைப் பதிவேற்றி புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஆனால், புகைப்படம், கைரேகை போன்றவை நேரடியாக மட்டுமே புதுப்பிக்க முடியும்.
பிற சேவைகள் நிறுத்தம்?
ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பெயர் திருத்தம், பிறந்த தேதி திருத்தம் போன்ற சேவைகளை ஆதார் ஆணையம் தற்காலிகமாக ஆதார் ஆணையம் நிறுத்திவைத்துள்ளது.
ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணிகள் ஓரளவு நிறைவடைந்தவுடன் பிற சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இலவசமாக புதுப்பிக்கலாம்
ஆதார் விவரங்களை கட்டணமின்றிி
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14, 2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த தேதிக்குப் பின்னரும் ஆதார் விவரங்களை புதுப்பித்துக்கொள்ளலாம். அதற்கு ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment