TNPSC GROUP 2 A முதன்மை தேர்வு முறையில் மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/12/2024

TNPSC GROUP 2 A முதன்மை தேர்வு முறையில் மாற்றம்

 1344075

குரூப்-2ஏ முதன்மை தேர்வில் பொது அறிவு மற்றும் மொழித் தாள் தேர்வு கணினி வழியில் இல்லாமல் ஓஎம்ஆர் ஷீட் முறையில் நடத்தப்படும்

 வேலைவாய்ப்பு செய்திகள் 2024

என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலர் எஸ்.கோபால சுந்தர ராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வில் இரண்டுக்கும் பொதுவான தமிழ் மொழி தகுதி தேர்வு (தாள்-1) 2025 பிப்ரவரி 8-ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.


குரூப்-2ஏ முதன்மை தேர்வின் தாள்-2 (பொது அறிவு, மொழித் தாள் தேர்வு)


அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். இந்த தேர்வு ஓஎம்ஆர் ஷீட் முறையில் நடத்தப்படும். (இது கணினி வழியில் நடத்தப்படுவதாக ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது.)


குரூப்-2 முதன்மை தேர்வில் பொது அறிவு தேர்வு (தாள்-2) பிப்ரவரி 23-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தமிழ் மொழி தகுதி தேர்வு மையத்தை மாற்ற விரும்பும் தேர்வர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459