School morning Prayer activities 21.12.2024 - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/12/2024

School morning Prayer activities 21.12.2024

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.12.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: சூது

குறள் எண் :940


இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

உழத்தொறூஉம் காதற்று உயிர்.


பொருள்:

பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் குதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருத்த வருந்த உயிர் மேன் மேலும் காதல் உடையதாகும்.


பழமொழி :

Justice delayed is justice denied


தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்


இரண்டொழுக்க பண்புகள் :  


  *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.


*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.


பொன்மொழி :


கல்வியும் நன்னடத்தையுமே ஒரு மனிதனை நல்லவனாக்குகின்றன---அரிஸ்டாட்டில்


பொது அறிவு : 


1. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகலிடம் பெற்ற இடம் எது? 


விடை: பத்தமடை. 


2. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் எது? 


விடை: கன்னியாகுமரி.


English words & meanings :


 Reading       -       வாசித்தல் 


 Sewing        -       தையல்


டிசம்பர் 21 இன்று


ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்தநாள்


எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு:  பிறப்பு: :திசம்பர் 21, 1972) அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், முன்னாள் முதல்வரும் ஆவார்.இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.


நீதிக்கதை


 பேராசை 


முன்னொரு காலத்தில் ராமு, சோமு என்ற தொழிலதிபர்கள் இருந்தனர். அவர்கள் ஒன்றாக பயணம் செய்தனர். அவர்கள் போகும் வழியில் சோமு கீழே ஒரு பை கிடப்பதை பார்த்தார். அந்த பையை திறந்து பார்த்தால் பை முழுக்க தங்கக் காசுகள் இருந்தன. 

ஆஹா! நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி!

TEACHERS NEWS
எனக்கு இவ்வளவு தங்க காசுகள் கிடைத்திருக்கு!” 


என்று ரொம்ப பெருமையாக ராமுவிடம் சோமு சொன்னார். அப்போது ராமு சொன்னார் “நீ மட்டும் அதிர்ஷ்டசாலி என்று சொல்லாதே,  நாம் இரண்டு பேரும் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்" என்றார். 


“அது எப்படி முடியும் நான் தான் இந்த பையை முதலில் பார்த்தேன். அதனால் எல்லா தங்கமும் எனக்குத் தான். அப்புறம் அதிர்ஷ்டமும் எனக்குத் தான். உனக்கு இல்லை” என்று கூறினார் சோமு. 


சோமு சொன்னதைக் கேட்ட ராமு எதுவும் பேசவில்லை. தேவை இல்லாமல் சண்டை போடக்கூடாது என்று நினைத்தார் ராமு. அந்த சமயத்தில் யாரோ பின்னாடி இருந்து திருடன், திருடன் என்று கத்தினார்கள். அப்போது அவர்கள் திரும்பி பார்க்கும் போது, கையில் கம்போடு சிலர் தங்களை நோக்கி ஓடிவருவதை பார்க்கிறார்கள். 


அப்போது சோமு சொன்னார் “ஐயோ! கடவுளே! இப்போது நம்மை இவர்கள் தங்கத்தோடு பார்த்தால் நாம் மாட்டிக்கொள்வோம், ரொம்ப அடிப்பார்கள் ” என்று கவலையோடு சொன்னார்.


அதுற்கு ராமு சொன்னார் “நாம் இல்லை. நீதான் மாட்டுவாய், உன்னை தான் பயங்கரமா அடிப்பாங்க. நீ சொன்னபடி, அந்த தங்கம் உனக்கு மட்டும் தான் சொந்தம் என்றாய் அல்லவா, இப்போ அவங்க தர போகும் அடியும் உனக்கு மட்டுமே சொந்தம்” என்றார். 


 நாம் நமது அதிர்ஷ்டத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் நமது கெட்ட நேரத்தில் அவர்கள் நம்முடன் இருப்பார்கள் என்று யோசிப்பது முட்டாள்தனம். 


இன்றைய செய்திகள் - 21.12.2024


* தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.


* சித்த மருத்துவ கல்வி, ஆராய்ச்​சி​யில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்​கிறது: மத்திய அரசு பாராட்டு.


* மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சத்துணவு மையங்களில் 8,997 சமையல் உதவியாளர்களை நியமிக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது


நாடு முழுவதும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


* சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார்: நாசா புதிய தகவல்.


* பிபா இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி.


* பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர்; 26-ந்தேதி தொடக்கம்.


Today's Headlines


* Speaker Appavu has announced that the Tamil Nadu Legislative

 வேலைவாய்ப்பு செய்திகள் 2024

Assembly session will begin on January 6 with the Governor's address.


* Tamil Nadu is a pioneer state in Siddha medical education and research: Central government praises.

The Social Welfare Department has ordered the appointment of 8,997 cooking assis


ICT போதிமரம் 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459