*அனுப்புநர்* *சு.செல்வராஜ் மாவட்டத்தலைவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்டம்.*
*பெறுநர்*
*மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்*
*தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் சென்னை.*
*மதிப்புமிகு ஐயா,*
*பொருள் : பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாத் திட்டத்தின் கீழ் வகுப்பு
, வருமானம் மற்றும் இருப்பிடச்சான்று வழங்கிடவும், உதவித்தொகையை மூன்று மடங்கு உயர்த்தி வழங்க வேண்டுதல் தொடர்பாக.**பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விலையில்லா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமானம், வகுப்பு மற்றும் இருப்பிடச்சான்று தேவைப்படுகிறது .மேற்படி சான்றுகள் இணைய வழியில் விண்ணப்பிக்க கட்டணம் ரூபாய் 180 செலவாகிறது. மாணவர்கள் ரூ 500 கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ரூ 180 சான்றுகள் பெறும் கட்டணமாக பெற்றோருக்கு செலவாகிறது. மேலும் இந்தச் சான்றுகள் விண்ணப்பிக்க பெற்றோர்கள் தங்கள் இரண்டுநாள் வேலையை விட்டுவிட்டுத்தான் போகவேண்டிய சூழ்நிலை. மொத்தத்தில் 500 ரூபாயைவிட அதிகமாகச் செலவாகிறது. எனவே, கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு மேற்படி மூன்று சான்றுகளையும் விலையில்லாத் திட்டத்தின்கீழ் வழங்க வேண்டும் எனவும்,
உதவித் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் எனவும் ஏழை மாணவர்களின் நலன் காத்திட தங்களை கேட்டுக் கொள்கிறேன்.*
இப்படிக்கு *சு.செல்வராஜ் மாவட்டத்தலைவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்டம்.*
செல்: 7538875751
No comments:
Post a Comment