ஆசிரியர்கள் எதிர்ப்பு
ஓய்வுபெற்ற பின், மறு நியமனம் செய்யப் படும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
அதன் செயலர் பேட்ரிக் கூறியதாவது: ரேமண்ட்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் பணியாற்றிய, பட்டதாரி ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடை யில் ஓய்வு பெற்றால், கல்வியாண்டு முடியும் வரை, பணியை தொடர, மறு நியமனம் செய்யப் படுகின்றனர்.
கடந்த 2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு, புதிய பென்ஷன் திட்டம் செயல்பாட்டில் இருக்கும்.
அவர்களுக்கு அவர் களின் கடைசி மாத சம் பளம் எவ்வளவோ, அதை அவர்கள் மறுநி யமன காலம் முடியும் வரை வழங்க வேண் டும்.
ஆனால், கொரோனா
காலத்தில் மறு நியமனம் செய்யப்பட்ட, அத்தியாவசிய பணியாளர்களுக்கான அரசாணை அடிப்படையில், சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்கின்றனர்.
ஆனால், அந்த அரசாணையில், ஆசிரியர் பணி குறிப்பிடப்பட வில்லை. இதை தெளிவுபடுத்தி, நிதித்துறை செயலர், கருவூலக்கணக்கு கமிஷனர் உள் ளிட்டோருக்கு, சங்கம் சார்பில் கடிதம் எழுதி உள்ளோம்
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment