பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார கொள்கைக்கு மத்திய மந்திரி ஒப்புதல்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/11/2024

பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார கொள்கைக்கு மத்திய மந்திரி ஒப்புதல்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

 

IMG_20241113_133505

பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார கொள்கைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டது

கடந்த 2-ந்தேதி சுகாதார மற்றும் குடும்பநலத்துறை மந்திரி அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கை வகுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.


இதுதொடர்பாக காங்கிரஸ் பிரமுகரும், சமூக ஆர்வலருமான ஜெயா தாக்குர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் "6 முதல் 12-ம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நாப்கின்கள் வழங்க வேண்டும். அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உறைவிட பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459