அரசு பள்ளிகளை இணைக்கும் திட்டம் மீண்டும் வருகிறதா? : கல்வித்துறை ஆலோசனைக்கு எதிர்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/11/2024

அரசு பள்ளிகளை இணைக்கும் திட்டம் மீண்டும் வருகிறதா? : கல்வித்துறை ஆலோசனைக்கு எதிர்ப்பு

 தமிழகத்தில் ஒரு கிலோ மீட்டருக்குள் இரண்டு, மூன்று அரசு பள்ளிகள் இருந்து, ஒற்றை இலக் கத்தில் மாணவர்கள் எண் ணிக்கை இருந்தால் அப் பள்ளிகளை ஒன்றிணைக்க கல்வித்துறை ஆலோ சித்து வருகிறது. இதற்கு ஆசிரி யர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த அ.தி. மு.க., ஆட்சி யில் மாணவர் எண் ணிக்கை குறைந்த 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட அரசு துவக்க பள்ளிகளை ஒன்றி ணைக்கும் முயற்சி நடந் தது. இதற்கு அப்போது தி.மு.க., உள்ளிட்ட அரசி யல் கட்சிகள், கல்வியாளர் கள், ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் தன. இதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போதுஅந்த திட்டத்தை தற்போ


தைய தி.மு.க., ஆட்சியில் கல்வித்துறை அதிகாரிகள் மீண்டும் கையில் எடுத் துள்ளனர்.


இதற்கு ஏற்ப இன்று (நவ.,8) சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கல் வித்துறை சார்ந்த ஆய்வுக் கூட் டம் நடக்க வுள்ள நிலை யில், அதற்கு முன்னோட்ட மாக அமைச்சர் மகேஷ் தலை மையில் நேற்று சென்னையில் நடந்த செயலாளர், இயக்குநர்கள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனை கள் முன்வைக்கப்பட்டுள் ளன. இக்கூட்டத்தில் அரசு பள்ளிகள் இணைப்பு திட் டம் குறித்தும் ஆலோசிக் கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது சென்னையில் நடந்த முன்ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிகள் இணைப்பு திட் டத்தால் ரூ.பல கோடி சம்பள இழப்பு தவிர்க்கப் படும் உள்ளிட்ட யோச னைகளை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். ஏற் கனவே காலியாக உள்ள தலைமையாசிரியர், ஆசி ரியர் பணியிடங்களை நிரப்ப அவர்கள் திட்டமி டுகின்றனர்.


முதல்வர் இத்திட் டத்தை ஏற்க கூடாது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற பள் ளிகள் மூடப்படும். பள்ளிகள் மேம்பாட்டிற்கு ரூ.பல கோடி நிதி ஒதுக்கீடு செய் யும் அரசு, அங்கு மாணவர் கள் சேர்க்கையை அதி கரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இதையும் மீறி பள்ளி இணைப்புக்கு நட வடிக்கை எடுத்தால் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட தயாராகி வருகின்றன என் றனர்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459