பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்துவதாக சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது .
7.11.2024 நாளிட்ட செய்தித்தாளில் வெளிவந்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளபடி , தருமபுரி மாவட்டம் , அரூர் கல்வி மாவட்டம் , காரிமங்கலம் ஒன்றியம் இராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்த திரு . K. பாலாஜி என்பார் , தனக்கு பதிலாக வேறொரு நபரைக் கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார் .
மேற்காணும் பொருள் குறித்து சென்னை - 6 , தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் . 25375 / டி 3 / 2024. நாள் 9.11.2024 ன் - படி . பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு ; ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளாமல் வெளிநபரைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடத்துவது குறித்து , பள்ளி ஆண்டாய்வு மற்றும் பள்ளிப் பார்வையின் போது ஏதேனும் கண்டறியப்பட்டாலோ அல்லது இது குறித்த புகார்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ கண்டிப்பாக அப்புகார் மீது தனிக்கவனம் செலுத்தி மாவட்டக் கல்வி அலுவலரே ( தொடக்கக் கல்வி ) விசாரணை மேற்கொண்டு . அவ்விசாரணையில் உண்மையிருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இறுதியாணை பிறப்பிக்கப்பட வேண்டும்.
பள்ளிகளில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது அத்தகவலை மாவட்டக் கல்வி அலுவலருக்கு அளிக்கத் தவறும் பட்சத்தில் , தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் தொடக்கக் கல்வி அலகில் தகுதியுள்ள காலிப்பணியிடத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் ( SMC ) நியமனம் பெற்ற 6053 எண்ணிக்கையில் உள்ள தற்காலிக ஆசிரியர்கள் தவிர , வேறு ஏதேனும் நபர்கள் பணிபுரிந்து வருகிறார்களா என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கோரப்பட்டது
No comments:
Post a Comment