நவம்பர் 1 முதல் அமலாகும் - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/11/2024

நவம்பர் 1 முதல் அமலாகும்

 ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது யுபிஐ (UPI) சேவை தொடர்பான 3 முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது மற்றும் இவைகள் எல்லாமே 2024 நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. அதென்ன மாற்றங்கள் / விதிகள்? இதோ விவரங்கள்:

நவம்பர் 1 ஆம் தேதி முதல் யுபிஐ லைட் பிளாட்ஃபார்மில் (UPI Lite platform) பெரிய-பெரிய மாற்றங்கள் நடக்கும். முதலாவது மாற்றம் - நவம்பர் 1 ஆம் தேதி முதல் யுபிஐ லைட்டின் பரிவர்த்தனை வரம்பு (UPI Lite Transaction Limit) அதிகரிக்கப்படும்.


தற்போது வரையிலாக யுபிஐ லைட் சேவையின் கீழ் ஒவ்வொரு பயனரும் ரூ.500 வரை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஆனது யுபிஐ லைட்டின் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பை ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்த முன்மொழிந்துள்ளது.

இரண்டாவதாக - யுபிஐ லைட் வாலட் வரம்பும் (UPI Lite Wallet Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. நினைவூட்டும் வண்ணம் முன்னதாக யுபிஐ லைட் வாலட்டில் அதிகபட்சமாக ரூ.2000 பேலன்ஸ் வைத்திருக்க முடியும். மேலும் யுபிஐ லைட் வாலட்டின் தினசரி செலவு வரம்பு (Daily spending limit of UPI Lite Wallet) ரூ. 4000 ஆக இருந்தது.மூன்றாவதாக - நவம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு, உங்கள் யுபிஐ லைட் பேலன்ஸ் (UPI Lite Balance) ஆனது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு கீழே சென்றால், புதிய ஆட்டோ டாப்-அப் அம்சம் (Auto top-up feature) வழியாக யுபிஐ லைட்-ல் மீண்டும் பணம் சேர்க்கப்படும். அதாவது இனிமேல் மேனுவல் டாப்-அப் (Manual top-up) செய்ய வேண்டிய அவசியம் இருக்காது!

யுபிஐ பின்-ஐ பயன்படுத்தாமலேயே சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கும் யுபிஐ லைட் வாலட்டை அடிக்கடி நிரப்ப வேண்டி உள்ளது மற்றும் இதற்காக பயனர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட்டிலிருந்து கைமுறையாக வாலட் பேலன்ஸ்-ஐ நிரப்ப வேண்டியதாக உள்ளது. ஆனால் புதிய ஆட்டோ-டாப்-அப் அம்சத்தின் வருகையானது எல்லாவற்றையும் மாற்ற போகிறது.நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI) கூற்றுப்படி, இந்த செயல்முறையை யுபிஐ லைட் சேவையை நெறிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது மற்றும் கைமுறையாக ரீசார்ஜ் செய்வதற்கான தேவையை நீக்குகிறது. நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆகஸ்ட் 27, 2024 தேதியிட்ட என்பிசிஐ அறிவிப்பில் யுபிஐ லைட் ஆட்டோ-பே பேலன்ஸ் அம்சம் அறிவிக்கப்பட்டது.

இதேபோல இந்திய ரிசர்வ் வங்கி ஆனது தனது கடன் கொள்கையில் (Credit policy) தொடர்ந்து பத்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்துள்ளது. அதாவது ரெப்போ விகிதம் சமமாக இருப்பதால், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களில் உங்கள் இஎம்ஐ-யில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று அர்த்தம்.

மேலேயும் இபிஎப்ஓ (EPFO) எனப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) ஆனது டிஜிட்டல் சிக்னேச்சர் சான்றிதழ் (Digital Signature Certificate - DSC) மற்றும் இ-சைன் கோரிக்கைகளை (E-Sign requests) செயலாக்குவதற்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இது ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது, நவம்பரில் கடுமையாக பின்பற்றப்பட உள்ளது.


கடைசியாக டிராய் (TRAI) எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது மெசேஜ் டிரேசிபிலிட்டி (Message traceability) தொடர்பான இந்த புதிய விதிகளை நவம்பர் 1 முதல் அமலுக்குக்கு கொண்டுவருவதாக அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது இந்த கெடு 1 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறதுஇதன் கீழ் முதன்மை நிறுவனங்களிலிருந்து (PEs) வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களை கண்காணிக்க முடியும் என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (அதாவது ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள்) உறுதி செய்ய வேண்டும். பொருந்தாத அனுப்புநர் விவரங்கள் (Mismatched sender details) அல்லது தெளிவான அனுப்புநரின் அடையாளம் (Clear sender identity) இல்லாத எந்தவொரு மெசேஜ்களுமே பிளாக் செய்யப்படும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459