1. கீழ்க்காண்பவற்றுள் பொருத்தமான இணையினைத் தெரிவு செய்க.
(அ) செவ்விலக்கியம் - Epic literature
(ஆ) காப்பிய இலக்கியம் - Classical literature
(இ) நாட்டுப்புற இலக்கியம் - Modern literature
(ஈ) பண்டைய இலக்கியம் - Ancient literature
2. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் – இக்குறளில் பயின்று வரும் அதிகாரம்.
(அ) ஒழுக்கமுடைமை
(ஆ) பெரியாரைத்துணைக்கோடல்
(இ) ஆள்வினை உடைமை
(ஈ) கொடுங்கோன்மை
3. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு – இக்குறளில் பயின்று வருவது.
(அ) மோனை மட்டும்
(ஆ) எதுகை மட்டும்
(இ) மோனை, எதுகை
(ஈ) எதுகை, இயைபு
4. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் ; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் பயின்று வரும் அணி.
(அ) உவமை அணி
(ஆ) எடுத்துக்காட்டு உவமை அணி
(இ) ஏகதேச உருவக அணி
(ஈ) உருவக அணி
5. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர். – இக்குறளில் வரும் சுட்டுச்சொல்.
(அ) ஊழையும்
(ஆ) உப்பக்கம்
(இ) காண்பர்
(ஈ) உஞற்றுபவர்
6. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய கோடிஉண் டாயினும் இல் –இக்குறளில் பயின்று வரும் அளபெடை.
(அ) இன்னிசை
(ஆ) சொல்லிசை
(இ) இசைநிறை
(ஈ) ஒற்றளபெடை
7. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் பயின்று வரும் அணி.
(அ) உவமை அணி
(ஆ) எடுத்துக்காட்டு உவமை அணி
(இ) ஏகதேச உருவக அணி
(ஈ) உருவக அணி
8. ’இயல்பான மொழிநடையை உருவாக்குதல்’ என்னும் மென்பொருள் பயன்படுவது.
(அ) வங்கிகளில்
(ஆ) இதழியலில்
(இ) கல்வி நிலையங்களில்
(ஈ) இணைய வணிகத்தில்
9. சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளைஅலசி, நோயாளியின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.
(அ) பெப்பர்
(ஆ) வேர்டுஸ்மித்
(இ) இலா
(ஈ) வாட்சன்
10. கூற்று 1 : சீனாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இயந்திர மனிதர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளன.
கூற்று 2 : சீன மொழியின் வெவ்வேறு வட்டார வழக்குகளையும்கூட அவை புரிந்துகொண்டு பதில் அளிக்கின்றன.
(அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
(ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
(இ) கூற்று 1,2 இரண்டும் சரி
(ஈ) கூற்று 1,2 இரண்டும் தவறு
No comments:
Post a Comment