தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (TTSE) வினா விடை - 05 - ஆசிரியர் மலர்

Latest

 




06/10/2024

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (TTSE) வினா விடை - 05

 1. பாரதியார் இயற்றிய கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி முதலியவை ஒரு


அ) காவியங்கள்
ஆ) கும்மிப்பாடல்கள்
இ) குழந்தைப் பாடல்கள்
ஈ) தேசப்பக்தி பாடல்கள்

2. புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாக அமைந்தது.

அ) மரபுக்கவிதை
ஆ) ஹைக்கூக் கவிதை
இ) வசன கவிதை
ஈ) யாப்புக்கவிதை

3. கீழ்க்காண்பவற்றுள் இடம்புரிப் புயல்களுடன் தொடர்பில்லாதது.

அ) அமெரிக்கா
ஆ) ஜப்பான்
இ) சீனா
ஈ) ஹவாய் தீவுகள்

4. காலங்கரந்த பெயரெச்சம்.

அ) வேற்றுமைத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை
ஈ) பண்புத்தொகை

5. மலர்க்கை – இச்சொல்லில் வரும் ‘மலர்’ என்பது ----------.

(அ) உவமை
(ஆ) உவமேயம்
(இ) உவம உருபு
(ஈ) பொதுத்தன்மை

6. பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.

(அ) தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை – சிலப்பதிகாரம்
(ஆ)அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் – நற்றிணை
(இ) காலின் ஏழடிப் பின் சென்று – சிறுபாணாற்றுப்படை
(ஈ) விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல – கலிங்கத்துப்பரணி

7. ’பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ’ – தொடருடன் தொடர்புடையது.

(அ) குறுந்தொகை
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) நற்றிணை
(ஈ) புறநானூறு

8. கீழ்க்காண்பவற்றுள் அதிவீரராம பாண்டியன் இயற்றாத நூல்.

(அ) வெற்றிவேற்கை
(ஆ) திருக்காவலூர்க் கலம்பகம்
(இ) நைடதம்
(ஈ) லிங்கபுராணம்

9. பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையினைத் தெரிவு செய்க.

(அ) பாய்ச்சல் - கவனமாக
(ஆ) பதனம் - பாத்தி
(இ) மகுளி - மேல்கஞ்சி
(ஈ) அலுக்கம் - அழுத்தம்

10. முகம் கடுத்து இடுவாராயின் கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே என்று கூறும் நூல்.

அ) முல்லைப்பாட்டு
ஆ)மதுரைக்காஞ்சி
இ)நெடுநல்வாடை
ஈ) விவேகசிந்தாமணி

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459