சமுதாய அமைப்பாளர் தற்காலிக பணிக்கு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது -
மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள்
தகவல்
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ், திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி / பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள வெளிஆதார முறையில் தற்காலிகமாக சமுதாய அமைப்பாளராக பணிபுரிவதற்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்த, 01.07.2024 தேதியில் 35 வயதிற்குட்பட்ட, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி, தொலைபேசி எண்.9342682297 என்ற முகவரியில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரியில் 10.10.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு 9342682297 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்
மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருநெல்வேலி.
No comments:
Post a Comment