DEE - முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Appல் அக்டோபர் 09க்குள் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




05/10/2024

DEE - முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Appல் அக்டோபர் 09க்குள் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

 


 IMG_20241005_160404

DEE - முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Appல் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.


2024-25ஆம் கல்வி ஆண்டு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED செயலியில் உள்ளீடு செய்தல் சார்ந்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது .

 1. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவத் தொகுத்தறி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை TNSED செயலியில் ஆசிரியர்கள் உள்ளீடு செய்திடல் வேண்டும் .

 2. விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை ( 60 மதிப்பெண்கள் ) கேள்விவாரியாக அக்டோபர் 09 ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இணைப்பில் கண்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளது. 

3. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த விவரத்தினை தெரிவிக்குமாறும் ஆசிரியர்கள் இப்பொருள் சார்ந்து தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேற்படி மதிப்பெண்களை உள்ளீடு செய்தல் சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறார்கள் .

DEE Circular - SA Mark Entry - Term 1 - 2024-25 Proceedings 

👇

Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459