சென்னை, அக்.3: ஒருங்கிணைந்த கல்விதிட்டத்தின்கீழ் பணி யாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு செப் டம்பர் மாத ஊதியத்தை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி: ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி, பள்ளிக் கல்வித் துறைக்கு வர வில்லை என்ற காரணத்தைக் கூறி நிரந்தர ஆசிரியர்கள்,ஆசி ரியர் அல்லாத பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் சுமார் 32,500 பேருக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்காதது கண்டனத்துக்குரி யது. மாநில அரசின் நிதியிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முறையாக ஊதியத்தை வழங்க வேண் டும்.
ஓ.பன்னீர்செல்வம்: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாதது கண்டிக்கத்தக் கது. மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவது என்பது தனி. ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது எனவே, ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு முறையாக ஊதி யம் வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment