தமிழகம் முழுவதும் ஐடிஐ-க்களில் மாணவர் சேர்க்கை அக்.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் பி.விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), 311 தனியார் ஐடிஐ-க்களும் இயங்கி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை செப்.30-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு சேர்க்கைக்கான கடைசி நாள் அக்.30 வரை நீட்டிக்கப்படுகிறது.
எனவே, ஐடிஐ-யில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட ஐடிஐ-க்கு தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சாதிச் சான்றிதழுடன் நேரில் சென்று தாங்கள் விரும்பும் தொழிற்பிரிவில் சேரலாம். அரசு ஐடிஐ-யில் சேர பயிற்சிக் கட்டணம் கிடையாது. அதோடு மாதம்தோறும் ரூ.750 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மேலும் இலவச சைக்கிள், சீருடை, ஷூ, பயிற்சிக்கான கருவிகள் மற்றும் பஸ் பாஸ் ஆகியவையும் உண்டு. மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9499055689 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment