அண்ணாமலை பல்கலை பி.லிட் படிப்பு பி.ஏ. தமிழுக்கு இணை - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/10/2024

அண்ணாமலை பல்கலை பி.லிட் படிப்பு பி.ஏ. தமிழுக்கு இணை


 

1324578

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.லிட். படிப்பு பி.ஏ. தமிழ் படிப்புக்கு இணையானது என உயர்கல்வித் துறை உத்தரவிட்டது.


இதுகுறித்து உயர்கல்விதுறை செயலர் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.லிட். படிப்பு வேலைவாய்ப்பு நோக்கில் பி.ஏ. தமிழ் பட்டப்படிப்புக்கு இணையானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 


மேலும், தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம் (ஆனர்ஸ்- வங்கி மற்றும் நிதி பணிகள்) படிப்பும், கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம் (தொழில்சார் கணக்கு) படிப்பும் பி.காம் படிப்புக்கு இணையானதாக அனுமதிக்கப்படுகிறது

 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459