தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றம்! - ஆசிரியர் மலர்

Latest

 




25/10/2024

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றம்!

 


 

IMG-20241025-WA0003

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி/ பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் வாக்காளர் சிறப்பு முகாம்...


நவம்பர் மாதம் 9-10 மற்றும் 23-24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில்...


தற்போது, நவம்பர் மாதம் 16-17 மற்றும் 23-24 ஆகிய தேதிகளில் நடைபெறும்.


ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29-ம் தேதி வெளியிடப்படும்.


வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் வரும் 29-ம் தேதி முதல் நவம்பர் 28-ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்.


இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்படும்.


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும், வாக்குச்சாவடி நிலை முகவர்களை (BLA) நியமித்துக் கொள்ளலாம்.


தமிழ்நாடு தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியீடு!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459