முதல்வர் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகள்: இன்று தொடக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




04/10/2024

முதல்வர் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகள்: இன்று தொடக்கம்

 தமிழ்நாடு முதல்வர் கோப்பைக் கான மாநில விளையாட் டுப்போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின் வெள்ளிக்கிழமை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.


மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் வென்ற 33,000 பேர் மாநில அளவிலான போட்டிகளில் பங் கேற்கத் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

மேம் பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த மாநில அள விலான போட்டிகள் அக். 4- ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடை பெறவுள்ளன.


மொத்தம் 36 வகையான விளை யாட்டுகள் நடத்தப்பட உள் ளன. போட்டியின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடை பெறுகிறது. துணை முதல்வர் உத யநிதி ஸ்டாலின் போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.


இதுதொடர்பாக அவர் கூறி யது:

கடந்த இரு ஆண்டுகளாக நடத் தப்பட்ட முதல்வர் கோப்பை போட்டி, பல திறமையான விளை யாட்டு வீரர்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. அவர்களில் சிலர் சொந்த மண்ணில் கடைசியாக நடைபெற்ற கேலோ இந் தியா இளைஞர் விளை யாட்டுபோட்டியில் மாநி லத்திற்காக பதக்கங்களை வென்றனர். 

ரூ.37 கோடி பரிசுத்தொகை: 

முதல்வர் கோப்பை போட்டிகளில் தனி நபர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்ப டும். இம்முறை4-ஆவது இடத்தை பிடிப்பவர்களுக்கும் ரூ.50 ஆ யிரம் பரிசாக வழங்கப்பட உள் ளது. குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன் றாம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரமும்வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்ப டும் சான்றுகள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலு கைகளும் பெற இயலும். மொத்த பரிசுத்


தொகை ரூ.37 கோடி வழங் கப்படஉள்ளது.


இம்முறை கைப்பந்து, கேரம், வாள்வீச்சு, செஸ், ஜூடோ, கோ- கோ, குத்துச்சண்டை, டிராக் சைக் கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ்,ஸ்குவாஷ் உள்ளிட்ட 11 விளையாட்டுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459