பல்கலையில் போலி கல்விச் சான்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/10/2024

பல்கலையில் போலி கல்விச் சான்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை


தமிழ் வழியில் படித்ததற்கு வேலைவாய்ப்பில் சலுகை பெற சிலர் மதுரை காமராஜ் பல்கலையில் போலிச் சான்று பெற்ற விவகாரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை எனக்கூறி இறுதி யாக 15 நாட்கள் அவகாசம் அளித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.


திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல்

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

செய்த மனு:


தமிழ் வழியில் படித் தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு உண்டு. குரூப் தேர்விற்கு டி.என்.பி.எஸ். சி., 2020 ஜன., 20 ல் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தொலைநிலைக்கல்வியில் பட்டம் பெற்று,தமிழ்வழியில் படித்ததற்குரிய (பி.எஸ்.டி.எம்.,) சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர்.


இவர்கள் பள்ளிக்கல்வி, பட்டப்படிப்பை தமிழ்வழியில் படிக்கவில்லை. கல்லுாரிகளில் ஆங்கில வழியில் படித்துவிட்டு, பல்கலை தொலைநிலைக்கல்வியில் கூடுதலாக ஒரு பட்டத்தை தமிழ் வழியில் படித்து சான்று பெற்றவர் கள்.


பள்ளிக் கல்வி முதல் கல்லுாரிவரை தமிழ்வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய இட ஒதுக்கீட்டில் அனுமதிக்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத் தரவிட வேண்டும் என

உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2021 மார்சில் நீதிபதிகள் அமர்வு, 'தமிழ் வழியில் படித்ததற்கான சலுகை பெற மதுரை காம ராஜ் பல்கலையில் சிலர் போலிச் சான்று பெற்ற விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை சார் விசாரிக்க போலீ வேண் டும்,' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் டி.என்.பி.எஸ்.சி. மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்றஅவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார். 


நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.லஞ்சஒழிப்புத்துறை  குரூப் 1 தேர்விற்காக 4 பேர் மதுரை காமராஜ் பல்கலையில் போலியாக பி.எஸ்.டி.எம்., சான்று பெற்றுள்ளனர். இதற்கு பல்கலையின் 2 ஊழியர் கள், 3 தனிநபர்கள் உதவி செய்துள்ளனர். அவர்கள் மீது அக்., 3 ல் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடர்கிறது. இவ்வாறு தெரிவித்தது.


நீதிபதிகள்:


இங்கு வழக்கு விசாரணைக்கு வருவதை கருத்தில் கொண்டு அவசரமாக முதல்நாள்


எப்.ஐ.ஆர்., பதியப்பட் டுள்ளது. விசாரணையில் திருப்தி இல்லை. இறுதியாக 15 நாட்கள் அவகாசம் அளித்து அக்., 21 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459