பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக இன்று (அக்.25) நடைபெற உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் இதர பணிகளை கண்காணிப்பதற்காக அவ்வப்போது அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் துறை சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டமானது காணொலிக் காட்சி வழியாக இன்று (அக்.25) நடைபெற உள்ளது.
இதில் பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி, இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள், பள்ளிகளில் ஆய்வுப் பணிகள், 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள், நலத்திட்டப் பொருட்கள் விநியோகம், நீதிமன்ற வழக்குகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment