எம்ஃபில் படிப்பு செல்லாது
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் படித்த எம்ஃபில் படிப்பு செல்லாது என உயர்கல்வித் துறை அறிவித்ததால், அப்பல் கலைக்கழகத்தை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி அழகப்பா பல் 2016, 2017, 2018-ம் ஆண்டுகளில் கோடை கால தொடர் படிப்பாக எம்ஃபில் பயிற்றுவிக்கப்பட்டது. இப்படிப்பை மாநிலம் முழுவதும் இருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட 2,617 பேர் படித்தனர்.
பட்டம் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் கள், சான்றுகளை பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பித்து, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுபெற்று வந்தனர்.ஆனால், அந்த எம்ஃபில் படிப்பை உயர்கல்வித் துறை ஏற்காததால், ஊக்க ஊதியம் பெற்ற ஆசிரியர்களிடம் இருந்து பணத்தைப் பிடித்தம் செய்யதணிக்கைத் துறை அறிவுறுத்தி யது. அதன் பின்னர் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்தில் பலமுறை முறையிட்டும் நட வடிக்கை இல்லை.
இதையடுத்து, பாதிக்கப்பட் டோர் நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தை முற்றுகை யிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பல்கலைக்கழகஅதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், முடிவு எட்டா ததால் போராட்டம் தொடர்ந்தது. இதுதொடர்பாக பாதிக்கப் பட்டோர் கூறுகையில், ‘தகுதித் தேர்வு எழுதித்தான் எம்ஃபில் படிப்பில் சேர்ந்து படித்தோம். பதவி உயர்வு. பணப்பலனுக்கு எங்களது எம்ஃபில் சான்றை ஏற்க முடியாது என உயர்கல்வித் துறைதெரிவித்துள்ளது. இதனால், நாங் கள் பெற்ற உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுத் தொகை யைத் திரும்பச் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் உயர் கல்வித்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி எங்களது
No comments:
Post a Comment