அரசு பள்ளிகளில் இணைச் செயல்பாடுகளை குறைத்து பாடம் நடத்த வழி ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியர் கள் கூறியதாவது:
கற்றல் வாய்ப்பும் கற் றல் சூழலும் இயல்பாக, முழுமையாக வாய்க்கப் பெறாத குழந்தைகளே - அரசுப் பள்ளிகளில் பெரும்பான்மையினராக உள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் அனைத்துக் களையும் பாடத்திட்டம் சார்ந்த அடிப்படைக் கற்றல் அடைவுகளை முழுமையாகப் பெறச் செய்வது பெரும் சவாலாக உள்ளது. - நவீன தகவல்
தொடர்புத் - தாக்கத்தால் நடத்தைச்சிக்கலுக்கு ஆளாகியுள்ள குழந்தைகளை எதிர்கொள் வது கூடுதல் சவாலாக உள்ளது.
இப்படிப்பட்ட சூழ லில் அரசுப்பள்ளி களில் முழு நிறைவான கற்றல் கற்பித்தலுக்கான வழிமுறைகளை உருவாக் குவதில் கல்வித்துறை நிர்வாகம் வழிகாட்ட வேண்டும்.
கல்வித்துறை நிர்வாகச் செயல்பாடுகள் எதிர் மாறாக உள்ளன. பாடத் திட்டச் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக பல்வேறு புதிது புதிதான கூடுதல் செயல் பாடுகளைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவது கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நடைமுறைச் சாத்தியங் களில் இருந்து பள்ளிகளின் அன்றாடச் செயல்பாடு களை திட்டமிடுவது கவ னத்தில் கொள்ளப்படுவ தில்லை. ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட் காமல் அதிகாரத்துவ முறையில் முடிவெடுப்பது நடை முறைப்படுத்துவதுமாக கல்வித்துறை நிர்வாகச்
செயல்பாடு மாறியுள்ளது. உடற் கல்வி, கலைக் கல்வி, வாழ்க்கைத் திறன் கல்வி, நூலக வாசிப்பு,இதழ் வாசிப்பு, மன்றச் செயல்பாடுகள், கலைத் திருவிழா, சிறார் திரைப் படம், தலைவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டப் போட்டிகள் இப்படியான எண்ணற்ற செயல்பாடு களை இருக்கின்ற ஆசிரி யர்களை வைத்து நிறை வேற்றவது சாத்தியமற்றது. சாத்தியமற்றதை அரை குறையாகச் செய்வதால் எந்தப் பயனையும் குழந் தைகள் அடையப் போவ தில்லை.
அனைத்துப் பள்ளி களிலும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர், 20 குழந்தை களுக்கு ஓர் வகுப்பு என்ற நிலை இருந்தால் மட்டுமே தற்போது கல்வித் துறை யால் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கற்ற கூடுதல்பாடத் திட்ட இணை செயல்பாடுகள், பாடத் திட்டம் சாராத செயல்பா டுகள் ஆகியவற்றை நிறை வேற்ற முடியும்.பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கு 2 ஆசிரியர், நடுநிலைப் பள்ளிகளில் எட்டு வகுப்பு களுக்கு 5 ஆசிரியர் பணி யிடங்கள் தான் உள்ளன.
தற்போது 30% பள்ளி களில் நிர்ணயம் செய்யப் பட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணியிடம் அதி கமாக காலியாக உள்ளது.
கடந்த 2014 ம் ஆண் டிற்கு பிறகு இடைநிலை ஆசிரியர்கள் நியமனமே செய்யப்படவில்லை. ஆசி ரியர்கள் தேவையென்றால் பள்ளி மேலாண்மை குழு மூலம் டெட், பிஎட், டிகிரி முடித்தவர்களை ரூ.10 ஆயிரம் மாத தொகுப் பூகியத்தில் நியமனம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறி வுறுத்தியுள்ளது.இதனால் அரசியல்வா திகள் சிபாரிசு காரணமாக தகுதியற்றவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. பள்ளியல் இருக்கின்ற ஆசிரியர் களால் பாடத் திட்டம் சார்ந்த கற்றல் கற்பித்தல் செயல்பாடு களை முழுமையாக நிறை வேற்றுவதே குதிரைக் கொம்பாக உள்ளது. ஆசி ரியர்கள் பாட நூலைக் கையில் எடுத்து முழுமையாக, நிறைவாக கற்பித்தலைத் திட்டமிடு வதும் செயல்படுத்துவதும் பள்ளிகளில் அரிதான செயலாக மாறிவருகிறது.
கல்வித்துறை நிர்வாகத் தில் ஆசிரியர் பணியில் அனுபவம் பெற்றவர்கள் இருந்தால் அனைத்தும் சரியாக நடக்கும் என்று ஆசிரியர் சமூகம் எதிர் பார்த்தது. ஆனால் அது வும் கனவாகப் போய்விட் டது. தினமும் ஒரு சுற்ற றிக்கையால் ஆசிரியர்கள் பாட நடத்த முடியாத சூழ் நிலையில் மாணவ, மாண விகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என் பதே நிதர்சனம். ஆகை யால் பள்ளி கல்வித்துறை பாடதிட்டம் சாராத செயல் பாடுகளை தவிர்த்து கல் விக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இவ் வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment