தீபாவளி முன்பணம் அரசு ஊழியர்கள் கோரிக்கை: களஞ்சியம் செயலி கடந்த நான்கு நாட்களாக செயல் படவில்லை - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/10/2024

தீபாவளி முன்பணம் அரசு ஊழியர்கள் கோரிக்கை: களஞ்சியம் செயலி கடந்த நான்கு நாட்களாக செயல் படவில்லை

 ‘அரசு ஊழியர்கள் தீபாவளி முன்பணம் பெற விண்ணப்பிப்பதில் சிக்கல்களை களைந்து, விரைவாக முன்பணம் வழங்க வேண்டும்' என தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் வலியுறுத்தி உள்ளது.


சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் ஆகியோர், நிதித்துறை செயலருக்கு அனுப்பியுள்ள மனு:


அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு பண்டிகை முன் பணமாக 10,000 ரூபாய் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பாக வழங்கப்படும். இந்த ஆண்டு தீபாவளியை யொட்டி, முன்பணம் பெற விரும்புவோர், 'களஞ்சியம்' செயலி வழியே விண்ணப்பிக்க வேண்டும் என கருவூல கணக்குத் துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.


இம்மாதம் 1ம் தேதிமுதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும், 27 நாட் களே உள்ள நிலையில், களஞ்சியம் செயலி கடந்த நான்கு நாட்களாக செயல் படவில்லை. அனைத்து பணியாளர்களும், செயலி வழியே விண்ணப்பிப்பது, சாத்தியம் இல்லாதது.


இதுபோன்ற தொழில் நுட்ப இடர்பாடுகளை வைத்துக் கொண்டு, பணி யாளர்கள் தீபாவளி முன் பணம் பெற, களஞ்சியம் செயலி வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, நிர்பந்திப்பது எந்த வகையிலும் நியாயமானதாக தெரியவில்லை.


எனவே, இதில் உள்ள சிக்கல்களை களைந்து, பணியாளர்களுக்கு தீபாவளி முன்பணம் விரைந்து வழங்க,

 வேலைவாய்ப்பு செய்திகள் 2024

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459