வேட்டையன் படத்தில் இருந்து குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட வேண்டும் : ஆசிரியர் சங்கம் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/10/2024

வேட்டையன் படத்தில் இருந்து குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட வேண்டும் : ஆசிரியர் சங்கம் கோரிக்கை



 அனுப்புநர்

மா.கலை உடையார்

மாவட்டச் செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,

தூத்துக்குடி மாவட்டம்.

கைபேசி: 9443963068


பெறுநர்

த.செ.ஞானவேல் அவர்கள்,

வேட்டையன் திரைப்பட இயக்குநர்.


மதிப்புமிகு ஐயா,

கடந்தசில தினங்களுக்கு முன்பு வெளியாகித் தற்போது திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டுள்ள தமிழகத்தின் முன்னணி நடிகரான திரு ரஜினிகாந்த் அவர்கள் நடித்துள்ள...


வேட்டையன்


 என்னும் படத்தைத் தாங்கள் எழுதி இயக்கியுள்ளீர்கள்.


படத்தில்  கல்வித்துறையை மையமாக வைத்து கோச்சிங் செண்டர்களின் கொள்ளை லாபத்தைத் தோலுறித்துக் காட்டியுள்ளீர்கள்.


ஆனால்...


அரசுப்பள்ளிகளின் அவலத்திற்காக அங்கலாய்த்த நீங்கள்...


ஒரு குறிப்பிட்ட அரசுப்பள்ளியான...


கோவில்பட்டி காந்திநகர் அரசுப் பள்ளியைப்...


பெயரைக் குறிப்பிட்டு...


கோவில்பட்டி காந்திநகர் அரசுப்பள்ளி மாணவர்கள் பெண் ஆசிரியரை ஆபாசமாகப் பதிவுசெய்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சை


என்ற காட்சியை அமைத்துள்ளீர்கள்.


அரசுப்பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் இவ்வேளையில்...


சிறப்பான பள்ளியாக தற்போது இயங்கி வரும் அப்பள்ளிக்கும் ...

 

அப்பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்களுக்கும்...


 தற்போது அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும்...


 குறிப்பாகப்


 பெண் ஆசிரியர்களுக்கும் ...


கோவில்பட்டி வாழ் பொது மக்களுக்கும்...


மிகுந்த வேதனையையும்...


தேவையில்லாத  மன உளைச்சலையும் தந்துள்ளீர்கள்.


எனவே


உடனடியாக படத்தில் இருந்து மேற்கண்ட காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்று எங்களது தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்டக்கிளை  சார்பாக அன்போடு  கேட்டுக்கொள்கிறோம்.


மீறும் பட்சத்தில் எங்களது அமைப்பு சார்பாக ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.


நன்றி.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459