முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாறுதல் - ஆணை வெளியீடு ( 4.10.2024 )
பார்வையில் காணும் அரசாணை இத்துடன் இணைத்து சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / துணை இயக்குநர்களுக்கு அனுப்பலாகிறது . மேற்காண் அரசாணையின்படி . முதன்மைக் கல்வி அலுவலர்களை பொறுத்தமட்டில் தமது பொறுப்புகளை , தலைமையிடத்திலுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அல்லது மாவட்டத்திலுள்ள பணியில் மூத்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைப்பு செய்துவிட்டு உடனடியாக பணிவிடுவிப்பு பெற்று புதிய பணியிடத்தில் பணியில் சேருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறே , மாறுதல் பெற்றுள்ள துணை இயக்குநர்கள் தங்களது அலுவலகத் தலைவரால் தெரிவிக்கப்படும் பொறுப்பு அலுவலரிடம் தமது பொறுப்புகளை ஒப்படைத்து செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . பணிவிடுவிப்பு / புதிய பணியிடத்தில் பணியில் சேர்ந்த அறிக்கை மற்றும் பொறுப்பு ஒப்படைப்புச் சான்றிதழ் , உடனடியாக மறுநினைவூட்டுக்கு இடமின்றி இவ்வியக்ககத்திற்கும் தொடர்புடைய இயக்ககங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ..
இணைப்பு : அரசாணை நகல்
👇
CEO's - DD Transfer - 04.10.2024 reg - Download here
No comments:
Post a Comment