2025-ம் ஆண்டு நீட் நுழைவு தேர்வு முறையில் மாற்றம் வருமா?- நிபுணர் குழு முடிவுக்காக மாணவர்கள் காத்திருப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/10/2024

2025-ம் ஆண்டு நீட் நுழைவு தேர்வு முறையில் மாற்றம் வருமா?- நிபுணர் குழு முடிவுக்காக மாணவர்கள் காத்திருப்பு

 

1500x900_5637939-neet

கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து தேர்வு முறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.


தேர்வு முறை நேர்மையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை மத்திய அரசு ஜூன் 22-ந் தேதி அமைத்தது. சுப்ரீம் கோர்ட் குழுவிற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது. செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அதன் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டு கொண்டது.


இதற்கிடையே என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவு தேர்வு முறையை அரசு மாற்றியமைத்தது. இதனால் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முறையில் மாற்றம் வருமா என்பதை அறிய மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.


இந்த நிலையில் உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் நீட் தேர்வு முறையில் மாற்றங்களை பற்றி விவாதிப்பதற்கு நடத்தப்பட்ட கூட்டத்தின் தகவல்களை சுகாதார ஆர்வலர் விவேக் பாண்டே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார்.


அவருக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் அளித்த பதிலில் தேடப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. நீங்கள் விரும்பியபடி, இந்த தகவலை உங்களுக்கு வழங்க முடியாது என்று கூறியிருந்தது.


இதை தொடர்ந்து பாண்டே மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.


அதில் நீட் 2024 மற்றும் 2025 தேர்வுகள் தொடர்பாக ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களின் விபரங்களை கேட்டிருந்தார்.


இந்த கேள்விக்கு பதில் அளித்த அரசு இந்திய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரில் அரசு உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.


அதன் அறிக்கை கிடைக்க இன்னும் காத்திருக்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளது.


இது தொடர்பாக டாக்டர் பாண்டே கூறியிருப்பதாவது:-


நீட் நுழைவு தேர்வில் மாணவர்களால் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியுமா என்பதை புரிந்து கொள்ளவும், தெளிவுப்படுத்தவும் ஆகஸ்டு மாதம் முதல் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை.


கடைசி நிமிட மாற்றங்கள் மாணவர்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை கொடுக்கும் என்றார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459